Sunday 7 May 2017

சன்னங்களை மூடியிருக்கும் கைகளின் மீது ஓங்கி அறையுங்கள்

 ஆயுதங்களுக்கு கருத்தியல் முக்கியமானதல்ல. ஆயுதங்களுக்கு என் உயிர் பற்றிய அக்கறை கிடையாது அது தட்டும் திசையில் மனிதன், நானாக மட்டுமல்ல கடவுளே ஆனாலும்  சாவு மட்டுமே தீர்ப்பு. எனினும் நான் பேனாவை நம்புகிறேன்
“எஸ்போஸ் (சந்திரபோஸ் சுதாகர், 1975 – 2007)

இந்தக் குறிப்புக்களைவிட வேறு எப்படி எஸ் போஸ் என்ற இலக்கிய செயற்பாட்டாளனை அறிமுகம் செய்து விடமுடியும்.  ஒரு ஊடகவியலாளனாக, பத்திரிக்கை ஆசிரியராக, சஞ்சிகை நிறுவுனராக, எழுத்தாளானாக , கவிஞனாக, போராளியாக என்று ஒரு சட்டகத்துக்குள் அடங்காத இளைஞராகவே  இருந்த எஸ்போஸ்  சிறுகதைகள் கட்டுரைகள் விமரிசனங்கள் நேர்காணல்கள் கவிதை  என இலக்கிய செயற்பாட்டின் அனைத்து பக்கங்களிலும் தன் பேனாவினை பதித்துக்கொண்ட போதிலும் கவிதைகளோடு அதிகம் நெருக்கமானவராவே இருந்திருக்கிறார்.