Wednesday 5 September 2012

இப்படியாக தானிருக்கிறோம் நீங்களும்,நானும்......


ஏதோவொன்று வலிந்து   
திணிந்துகொண்ட கணத்தில், 
விலத்தத்தொடங்கின ஒவ்வொன்றும்,
காரணம் தெரிவிக்காமலேயே ..............

விலத்தியவைகளின் எச்சங்கள் மட்டும் 
விலத்திப்போக முயலாமல் 
கூச்சலிட்டு சண்டையிடத்தொடங்கின
காரணங்களை முன்வைத்து.

மறந்தும்அவை,
பேசிக்கொள்ளவேயில்லை எதோவொன்றிடம்
அதன் வருகைக்கான காரணங்கள் பற்றி.
மிக மிக கவனமாக இருந்தன
அதை தனித்திருக்க வைப்பதில். 

மிக எளிய,கேவலமான 
உத்தியொன்றை பயன்படுத்தி 
குழப்பிக்கொண்டிருந்தன.

விபரீதமான அவற்றின் போக்குகளால் 
குற்றவுணர்வுடன் குலைந்துபோய் 
தன்னோடு பேசத்தொடங்கிய அது,
ஈற்றில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு   
தற்கொலை ஒன்றுக்கான 
ஆயத்தங்களை செய்ய தொடங்கியது நிதானமாக,

சண்டையை நிறுத்தி 
வேடிக்கை பார்க்க தொடங்கின 
விலத்தியவைகளின் எச்சங்கள்.
(தலைப்பை பார்க்கவும் )



4 comments:

  1. அர்த்தங்கள் புரிவதற்கு நேரமெடுக்கீறது தோழரே...மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. எங்களால் ஏதொரு காரணத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு உணர்வை,அல்லது ஒரு உயிரியை எதோ ஒன்று என்ற இடத்தில் நினைவிருத்தி வாசித்துப்பாருங்கள்
      நான் நினைத்த கருத்துரு கிடைக்கும் என நம்புகிறேன்,உண்மையில் உங்களின் தேடலாக இன்னும் சிலகருத்துக்கள் கிடைக்கலாம் ......பகிருங்கள்
      நன்றி தோழனே ............கருத்தாடல்கள் என்னை இன்னும் இருக்க தூண்டும்.

      Delete
  2. மோடன் ஆட்ஸ் என்ற சித்திரங்களுக்கு எப்படி அர்த்தங்களை தெரிகின்றோமோ அப்படியே உங்களை கவிதைகளும். வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பனே,என்னதான் இருந்தாலும் ஊரவனின் ஆதரவு கிடைக்கும் போதில் உற்சாகம் உயரப்பாய்கிறது......

      Delete