Monday 21 January 2013

உயிர் தின்னிகள்


அனுமானங்களை சுமந்து 
பரவிக்கொண்டிருந்தது 
இருளடைந்த சொல்லொன்று. 

உப்புக்கரிக்கும் அதன் ஓரங்களில் 
உறங்கிக்கிடக்கும் விசும்பல்களை
ஆதங்க பெருமூச்சுக்களை
ஓரந்தள்ளி, 
வக்கிர நிழல்களை பூசினார்கள்.

பின், 
திசைகளை தின்று வியாபித்த
கரிய நிழலில் ஒளிந்துகொண்டு, 
அவர்களுக்கான போதனையை ஆரம்பித்தார்கள்.
அது நிர்வாணத்தை துகிலுரித்தது.

இருளடைந்த சொல்லின்
மறுபக்கம் பற்றிய கவலையேதுமின்றி
கொண்டாடத்தொடங்கினார்கள்
தங்களுக்குள்.

அவள்
காற்றில் நிறைந்த  
வக்கிரங்களின் வெப்பத்தால்
உருகத்தொடங்கினாள்
கொஞ்சம் கொஞ்சமாக .............!!

4 comments:

  1. நல்ல கவிதை! நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் டயரி.உங்களின் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.

      Delete
  2. உப்புக்கரிக்கும் அதன் ஓரங்களில்

    உறங்கிக்கிடக்கும் விசும்பல்களை

    ஆதங்க பெருமூச்சுக்களை

    ஓரந்தள்ளி,

    வக்கிர நிழல்களை பூசினார்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக

    அவள் உருகத் தொடங்கினாலும்

    வக்கிரங்களின் வீரியம் மட்டும்

    சூட்டைக்கிளப்பும்

    வெறும்வாய் எப்பொழுதும்

    அசைபோட்டபடியே இருக்கும்

    இல்லாத ஒன்றிற்காக..........

    சிந்தனைக் கவிதைக்குப் பாராட்டுக்கள் நேற்கொழு . சிறிது கஸ்ரப்பட்டேன் பொருள் உணர என்பது மட்டும் உண்மை .

    ReplyDelete
    Replies
    1. வக்கிரங்களின் வீரியம் மட்டும்
      சூட்டைக்கிளப்பும்
      வெறும்வாய் எப்பொழுதும்
      அசைபோட்டபடியே இருக்கும்
      இல்லாத ஒன்றிற்காக..........///////////

      மிகஅழகாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நன்றி கோமகன்.து போன்ற சாயலில் முடித்திருக்கலாம் ஆனால் கவிதை உருவாக்கும் அதிர்வுகள் குறிந்து போகுமோ என்ற ஐயமே காரணம்.அருமையான வரிகள் உங்களதும். நன்றி கோமகன்

      Delete