Wednesday, 13 February 2013

காதல் காதல் காதல் போனால் .....(காதல் கலவை இரண்டு)

இருக்கிறதோ......
இல்லையோ .................
தவிக்க வைப்பது
தெய்வமும் காதலும் மட்டுமே.
                  *************
எருக்ககலை நாயுருவி
குருக்கத்தி கூப்பிட்டுக்குத்தி
இவைக்கே தெரியும் என் காதல்.
************

மொழிபெயர்க்க முடியாமல்
விழிகளால் எழுதும்
வித்தையை எங்கே கற்றாய்?
                        ************

நீ கடந்தபின் பார்க்கும் துணிவை
பார்த்து சிரிக்கிறது-உன்
ஒற்றைப்பின்னல்.
***********

எங்கேயும் எனைபிரிந்து
போய்விட முடியாது உன்னால்,
அங்கே
உனக்கு முதல்
என் கவிதை இருக்கும்.
                      **********










வழியனுப்புதல் நிச்சயம்
பாடையிலா???
பல்லக்கிலா???
**********

என்றாவது ஒருநாள்
உன் பெருமூச்சு சொல்லும்
என் மீதான காதலை.
                       **********
எரிப்பவர்களிடம் கேட்டுப்பார்
ஒரு இடம் எரியாதிருக்கும்
அதுவே
உன் முதல் பார்வை
பட்ட இடம்.
***********
நீ
எங்காவது எப்படியாது
வாழ்ந்துவிட்டு போ.
எப்படி இருக்கிறான்
என்று மட்டும் கேட்டுவிடாதே ...............


10 comments:

  1. Replies
    1. நன்றி ஐயா. வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்

      Delete
  2. Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. அழகான காதல்கள்..

    எங்கேயும் எனைபிரிந்து
    போய்விட முடியாது உன்னால்,
    அங்கே
    உனக்கு முதல்
    என் கவிதை இருக்கும்.

    வித்தியாசமான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆத்மா.
      ஆத்மாவையே என் காதல் வரிகள் தொட்டிருப்பதால் மிக அகமகிழ்கிறேன். நன்றி நண்பா வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.

      Delete

  4. திட்டி துப்பிய எச்சிலையே

    தேடித்திரிந்தவன்.

    நல்லவேளை

    நீ மட்டும் கிடைந்த்திருந்தால்..................



    உங்களுக்கு வெக்கமாய் இல்லையே :o ?? ஆராவது துப்பலை தேடி அலைவனே :lol: ??? அப்ப உங்கடை முதல் கவிதைக்கு நான் சொன்ன கருத்து சரிபோலைதான் கிடக்கு :lol: :D .

    ReplyDelete
    Replies
    1. வெக்கமா? என்னத்த வெக்கப்படனும் கோமகன்.அவனவன் என்னவோ எல்லாம் பொய் சொல்லுறாங்க காதலுக்காக,நானும் கொஞ்சம் சொல்லிப்பார்த்தேன் அவ்வளவுதான்.(lol)

      நன்றி கோமகன் ஐயா. வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.

      Delete
  5. ஒவ்வொரு வரிகளிலும் எது உசத்தி என்று சொல்ல முடியாதவாறு அத்தனை வரிகளும் உயர்ந்தே நிற்கின்றன..காதலால்...
    நீங்க எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க என்று யோசிச்சு யோசிச்சே நான் களைச்சுப் போனேன்.. அழகா சொல்லியிருக்கிறீங்க... பாராட்டுக்கள்... :)

    ReplyDelete
  6. காதலின் சில்மிசங்களை அருமையாக கூறியுள்ளார்...

    ///நீ கடந்தபின் பார்க்கும் துணிவை
    பார்த்து சிரிக்கிறது-உன்
    ஒற்றைப்பின்னல்.////

    ReplyDelete