Sunday 28 July 2013

கா(தல்)ல மாற்றம்..........

காற்றும் வறண்டு கிடக்கும்
இதுபோன்ற ஒரு கோடையில் தான்
உனை பிரிந்தேன்.

உனைப்பிரிந்த அந்த காலம்
புல் நுனிகள் கருகிய அந்த காலம்
காலமாகிப் போய்விடாமல் கிடக்கிறது.

அன்று,
உயிப்பூவிதழ்களின் சாயங்களை
வெளுறவைத்த
பெரும் கோடையின் கோபம்
நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........

இன்று,
விழிப்பூவிதழ்களில் எழுகின்ற வாசம்
தளம்பல்களை தந்தாலும்
கோடைக்கு முன்னான அந்த
இளவேனிற்காலத்தின் படிமங்களை மீட்டுகின்றன..........

வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில்
மக்கிக் கிடக்கும்
சிறுவெண் நண்டுக்கூடுகளாய்
காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும்,

எனக்குத்தெரியும்
இருந்தவரை
நல்ல காதலியாக இருந்தவள் நீ.

எனக்குத்தெரியும்
பிரியும்வரை
அன்பை பொழிந்தவள் நீ

எனக்குத்தெரியும்
அனல்சுமந்த பெருமூசுக்களால்
நீ தீமூட்டப்பட்ட அந்த கோடை காலமும்,

 உனக்கு தெரியுமா?
இப்போதெல்லாம் என் பிரார்த்தனைகள்
தவறியும் அந்த இளவேனிற்காலம்
உன் நினைவுகளுக்கு வந்துவிடகூடாது
என்பதாக இருக்கிறது என்பது..........


5 comments:

  1. பிரிவின் வலி புரிகிறது... பிரார்த்தனை சிறப்பு...

    ReplyDelete
  2. உறுவலி வேண்டா உனைத் தீண்டப்
    பெறுவலி வாட்டும் பிணைத்து!

    அருமையான வலிமிக்க கவி வரிகள் சகோ!

    த ம.2

    ReplyDelete
  3. ம்ம் இளவேனிக்கால பிரிவு கொடுமைதான் காதலில்:)))) கவிதை ரசித்தேன்!!

    ReplyDelete