Monday 18 November 2013

நிழல் தேடும் நியம்...

திரண்டெழும்  ஏக்கத்தின் கனதி சுமந்த வேர்கள்
நீர்ப்பிடம் தேடியலைந்து
வெடித்துக்கிளம்ப எத்தனித்து
கேவல்களுடன் ஒடுங்கிப்போகிறது.

இந்த
தோட்டத்தின் அந்தரங்க இருளில்
அரங்கேறுகிறது அவலநாடகம்.

வெற்றிடத்தில்
எதிர்கொள்ளவியலாத மௌனம்

உள்ளெழுந்த  விரிசல்களும்
எதிர்பார்ப்புக்களும்
கௌரவவிம்பத்தால் புறக்கணிக்கப்பட
எழுகிறது முடிவற்ற ஈனக்குரல்

இப்போதெல்லாம்  நான் கேட்பது
பரிபூரண சரணடைதல் ஒன்றையே.
காலம் ஒப்பனைகளுடன் கூடிய நேசித்தலை சுமத்துகிறது.

சபிக்கப்பட என் இதயமே,
எந்த விலக்கப்பட்ட கனியை உணவாக்கினாய் ?
மக்கிக்கிடக்கும் எலும்புகள் மீது
இனி எக்காலம் எவரால் கங்கை பாயும் ?

எங்கோ தொலைவில்,
வசந்தகாலக் கனவில் பாடிக்கொண்டிக்கும்
பறவையின்  குரல் சுமந்து தொடுகிறது காற்று.


3 comments:

  1. காலம் ஒப்பனைகளுடன் கூடிய நேசித்தலை சுமத்துகிறது.//உண்மைதான் ஆனால் அறிவியல் இல்லை

    ReplyDelete
  2. வாசகனின் சிந்தனையைத்
    தூண்டிவிட்டு
    சாளரங்களைத் திறந்து வைத்து
    வானத்தை எல்லையாக்கும்
    கவிதை

    ReplyDelete
  3. பரிபூரண சரணடைதல் ஒன்றையே...

    ReplyDelete