Saturday 14 December 2013

எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ

புற்றில் நுழையும் பாம்புபோல
மென்மையாக இறங்குகிறாய்
இரைதேடியோ அன்றில்
உறைவிடம் நாடியோ ?

இழக்காத
அந்தரங்கவேர்கள்  மீதும் சொல்லெறிகிறாய்
இடம்மாற்றவோ அன்றில்
பிரட்டிப்போடவோ ?

மௌனங்களை வென்றுபோக
சலனமில்லாத விழிச்சுழற்சியை  அனுப்புகிறாய்...
என்னை கொள்ளவா
கொல்லவா?

எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ..
அதற்குமுன்
வா ..
இந்த குளிரைப்போக்க ஒரு தேநீர் அருந்தலாம்..
பின்பொரு முத்தத்தை பகிரலாம்.






2 comments:

  1. இனிய வணக்கம் தம்பி,
    நடப்பின் நவில்தலும்
    அதற்கான வேறொரு காரணமும்
    நிகழ்வுகளின் சாரமாக அமைந்திருக்கும்
    அக்கருவினை மிக அழகாக
    கைகொண்டு இனிய கவிதை ஆக்கம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete