Sunday 1 July 2012

அசாதாரணம் சாதரணமாக...............

அழைக்காதவொரு விருந்தாளியாய் 
அடிக்கடி வந்துவிடுகிறது 
இப்போதெல்லாம் .............

ஒரு பெருமழைநேரத்தில் 
தகரகொட்டில் வாசியாக ..........

கொடும்பசியுடன்  ஒரு 
சமையலுக்கான தனியனாக ...........

ஒரே நேரத்தில் 
பூக்குவியலின் வாசத்தில் 
குழைந்துவரும் கெட்டவாசம் உணர்பவனாக ............

எரிச்சல் இயலாமை 
பொறுமையிழந்தொருகோபம் 
நிகழ்த்திப்போகிறது.

நீர்கோர்த்து விழிகள் 
நிறம்மாற  இமைகள்  குத்தும்,
வேர்த்து வியர்வை 
மென்சூடாய் நெற்றியோரம் வழிய 
சரக்கென்று வலிக்கும்.
சிலகணம் சிறுகாற்றுப்பட சில்லிடும். 

காரணங்கள் அறியப்படாமல் 
காரணங்கள் அறிவிக்கப்படாமல் 
எங்கோ நிகழும் ஒரு 
உறுப்பின் மறுப்பே 
அழைக்கப்படாத இந்த விருந்தாளியின் வருகை !!

என்ன செய்வது 
இயலாமைஎன்றாலும் 
இயங்குதலின்றிப்போனால்
வாங்குதல் வழங்குதல்  வற்றிப்போகும்.

இப்போதெல்லாம் பழகிவிட்டது 
வந்த விருந்தினரை வீட்டில்இருத்திவிட்டு 
வேலைக்கு செல்லும் இந்த வாழ்க்கையும் 
அடிக்கடி வரும் தலையிடியும் .............!!!

2 comments:

  1. வணக்கம் நெற்கொழுவான்.பெயரின் அர்த்தம் தெரியவில்லை !

    தலைவலிக்குக்கூட அருமையான வரிகளோடு கவிதை.வந்த விருந்தினரை வரவேற்றே பழகிவிட்டோமே !

    ReplyDelete
  2. அக்கா,நேற்கொழு என்பது எனது ஊரின் பெயர் .........
    வந்தவர்களை வரவேற்று வீட்டில் இருத்திவிட்டு,வேலைக்கு போகிறோமே அப்படியான ஒரு இக்கட்டான மனநிலை என்று சொல்ல வந்தேன் நன்றி அக்கா ,
    வரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete