Saturday 11 August 2012

ஒரு முயற்சிக்காக...........ஹைக்கூ .


எரிப்பதற்காய் அழுதது
நெருப்பு மடியில்
குழந்தையின்பிணம்.





இறைவன் இறந்துவிட்டிருந்தான் 
தூவப்பட்டது பறிக்கப்பட்ட 
மலர்கள்.


படியவாரிய கூந்தல்
கொடுத்து வைத்தது 
சீப்பு.


புத்தகங்களில் சிலந்திக்கூடு 
அவனிடம் இல்லை 
கண்கள்.


செருப்பை கழற்றியபொது 
 சிரித்தது வாசலில்
மிதியடி.

படபடத்த பட்டாம்பூச்சி 
பறக்க மறுத்தது பிடித்தது. 
மலர்க்கரம் 






25 comments:

  1. வணக்கம் சகோ,
    ரொம்ப பிசி,
    இன்று தான் இவ் இடம் வந்தேன்!
    பெரிய கருப் பொருள்களை சிறிய வரிகளுக்குள் உள்ளிழுத்துச் சொல்லியிருக்கிறீங்க.
    அருமையான முயற்சி! தொடர்ந்தும் வித்தியாசமான படைப்புக்களை தர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரமே ...நீங்கள் மிகுந்த வேலைப்பளுவுடன் இயங்குவது நான் அறிவேன்.இருந்தும் கருத்திட வந்தமைக்கு நன்றி.
      இது உங்களால் உருவான முயற்சி.உங்களின் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்கநன்றி சகோ.

      Delete
  2. Thangal muyatchi yavatrukum en Nenjarntha Nalvaalthukkal Sahotharare, Neram ulla pothellam ini inge thavaramal varugiren.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் வரவேற்கிறேன் சகோ,உங்களின் கருத்திடல்கள் என்னை இன்னும் இருக்க செய்யும்.நன்றி வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.

      Delete
  3. சிறியவரிகள் ஆயினும்
    அதிகச் சிந்தனைச் செறிவுள்ள கவிதைகள்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக சந்தோசம் திரு. ரமணி அண்ணா.உங்களின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
      காத்திருக்கிறேன் விமர்சனங்களுக்காக .

      Delete
  4. வணக்கம் சகோதரரே..
    உங்களின் துளிப்பாக்கள்
    என்னை தூளியில் இருந்து எழுப்பி
    சிந்திக்க வைக்கிறது..
    தொடருங்கள்...
    ஒன்றே முக்கால் அடியில் உலகினை அளந்த
    திருக்குறள் போல் தங்கள் துளிப்பாக்கள்
    இந்த புவனம் நிரப்பட்டும்...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரே,தங்களின் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.
      மிகப்பெரிய வார்த்தைகளால் வாழ்த்தியுள்ளீர்கள்.நன்றி

      Delete
  5. நறுக்காக எழுதினாலும் ஆழ்ந்த கருத்துக்களை அதில் அடக்கி விடுகின்றீர்கள். எனக்கும் எதோ கொஞ்சம் கவி எழுத தெரியும் என்றாலும்.. இவ்வளவு குறைவான வரிகளில் பெரும் பொருளை சொல்லத் தெரியாது. அதெல்லாம் ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும் .. தொடர்க தோழரே !!! வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு தனடக்கமான வார்த்தைகள்.பதிவுலக கத்துக்குட்டியை வரவேற்க வந்த கோடாங்கியே,
      தோள் கொடுபான் தோழன் என்பதை உங்களிடம் காண்கிறேன் தோழனே.உங்களின் பதிவுகள் வாசித்தேன்.எல்லா விடயங்களையும் தொட்டு செல்கிறிங்க. இனி அங்கேயும் தொடர்ந்தும் இணைந்திருப்பேன்.
      நன்றி தோழனே ,வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.

      Delete
  6. Siru siru kavithakal sinthanaiyai thundum kavithaikal.
    Valthukal .

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஅழகன்.அழகான வார்த்தைகள்.
      வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி

      Delete
  7. வணக்கம் சொந்தமே!!!

    எரிப்பதற்காய் அழுதது
    நெருப்பு மடியில்
    குழந்தையின்பிணமஃஃஃஃ


    பெரிய ஆளுப்பா நீங்க.அசத்திடீங்க.1முழு நாள் காத்திருப்பிற்கு சிறந்த பதில்..அருமை.அதிலும் மேற்சொன்ன வரிகள் சொல்கின்றன,என் பேராண்டி பெரிய மேதாவி என்று.வாழ்த்துக்கள் அன்புச்சொந்தமே!!!!!அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக மிக சந்தோசம் அப்பாத்தா ........
      விமர்சிக்க சொன்னா பாராட்டி போறிங்களே இது நியாயமா ?
      நன்றி வரவுக்கும் வாழ்த்துக்கும் அப்பாத்தா .

      Delete
  8. எல்லாமே ஆழமான கருத்தோட குட்டியா இருந்தாலும்

    ***
    புத்தகங்களில் சிலந்திக்கூடு
    அவனிடம் இல்லை
    கண்கள்.***

    இது மிகவும் பிடித்தது !

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அக்கா,காணவில்லையே என்று பார்த்தேன் உங்களின் கருத்தினை,
      இப்பதான் சந்தோசம்.நன்றி அக்கா
      வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் .

      Delete
  9. #எரிப்பதற்காய் அழுதது
    நெருப்பு மடியில்
    குழந்தையின்பிணம்.#
    அருமையான வரிகள். வாழ்த்துக்கள் உள்ளமே. அப்படியே நம்ம தளத்துக்கும் வாங்களேன்?

    http://newsigaram.blogspot.com/2012/08/dashboardu-puttukkichchu.html#.UCuc1Knibxo

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் நன்றி உறவே வந்திருந்தேன்.கருத்துக்கள் பதியவில்லை.இனி நிச்சயம் வந்து பதிவேன்.நன்றி உறவே.வரவுக்கு

      Delete
  10. புத்தகங்களில் சிலந்திக்கூடு அவனிடம் இல்லை கண்கள் §ம்ம்ம்ம் அருமை சகோ ஹைகூ!ம்ம் தொடருங்கள்!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரமே,உங்களின் வாழ்த்துக்கள் என் இருத்தலை இன்னும் ஊக்குவிக்கிறது.

      Delete
  11. Nanbaney indru than kanden unn vaira valaithalathai athatkul muthana varigalum pounnana paradukalum ennudaija nanbanuku. Perumai padukuren unn thozlan nan endru. Yaralum enna mudijatha padaipai unnara vaithu iurukurai.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு மோகன் தாஸ்.மிகவும் உயர்ந்த பாராட்டு.என் தகுதிக்கு மீறிய சொல்களால் பாராட்டி இருக்கிறிங்க.நன்றி வருகைக்கும்,கருத்துப்பகிர்வுக்கும்

      Delete
  12. சிந்திக்க வைத்து தொட்டுப் போன வரிகள் சகோ...

    சிறுகதை இப்போ வாசிக்கல சகோ அப்புறம் வாறன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ,உரிமையுடன் கேட்கிறேன் சிறுகதைக்கான விமர்சனத்தை. நன்றி சுதா வரவுக்கு

      Delete