Thursday 9 August 2012

ரகசியத்தின் நாக்குகள்!!!


இலை உதிர்த்திய காற்றில்
பரவிக்கொண்டிருந்தது
கிளையின் ஓலம்,

நுண்ணிய அந்த ஓசையால்
உருகி வழியதொடங்கியது உணர்வுகள்......
வர்ணிப்புகளை எல்லாம் தோற்கடிக்கும்
எரிமலைகுழம்பாய்.

அடங்காதவொரு பசியுடன்
உறங்கிய மனமிருகம் _அந்த
பேரிரைச்சலால் வெகுண்டு
உன்னத்தொடங்கியது மனச்சாட்சியை,

நாக்கின் வறட்சி மீது படிந்த
மனச்சாட்சியின் அதிர்வுகள்
ஓய்ந்துபோக மறுத்து
ஆரோகண சுதியடைந்தன........

மௌன விரிதலொன்றினை
உருவாக்கி இடம்மாறிக்கொண்டது
ஓலம் .............

எங்கோ தூசிஅடர்ந்த மூலையொன்றில் 
வௌவால் சிறகடிக்கும்
ஓசை படரத்தொடங்கியது

7 comments:

  1. நாக்கின் வறட்சி மீது படிந்த
    மனச்சாட்சியின் அதிர்வுகள்
    ஓய்ந்துபோக மறுத்து
    ஆரோகண சுதியடைந்தன........
    ஃஃஃஃஃஃஃஃஃஃ

    அருமை சொந்தமே!!! இப்போதெல்லாம் எங்குமே அடர்ந்த இருள் ஒன்றினுள் வௌவால் சிறகடிக்கம் ஓசை ◌தான் கேட்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாசித்தல் என்பதற்கும் உணர்தல் என்பதற்கும் இடையிலான இடைவெளிகளை அறியவைக்கிறது உங்களின் கருத்துக்கள்
      நன்றி உறவே .

      Delete
  2. "அடங்காதவொரு பசியுடன்
    உறங்கிய மனமிருகம் _அந்த
    பேரிரைச்சலால் வெகுண்டு
    உன்னத்தொடங்கியது மனச்சாட்சியை,..."
    அருமையாக இருக்கிறது வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஐயா,காத்திரமான உங்களின் கருத்துக்கள் என்னை இன்னும் இன்னும் எழுத தூண்டுகிறது
      வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி

      Delete
  3. நுண்ணிய உணர்வை வெளவாள் நன்கு குறிப்பாய் உணரும்!ம்ம் கவிதை அருமை சகோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றி உறவே, உங்களின் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.
      ஆக்கபூர்வமான வாசித்தலை உணரமுடிகிறது உங்களின் கருத்திடல் மூலம்
      நன்றி நண்ப.

      Delete
  4. பசி வந்தால் அனைத்தும் பறக்கும் இடத்தில் அந்த மிருகத்திற்கு மனச்சாட்சி இருக்கிறது என்று நீங்கள் குறிப்பிடும் இடத்திலேயே. வரிகளுக்கு சாட்சி பிறக்கிறது.

    ReplyDelete