Friday, 3 August 2012

பணி ஓய்வுபெறும் நல்லாசான்

                                                கற்பித்தல் கற்றல் என்ற  வன்வரைவுகளைதாண்டி, ஒரு இயல்பான இணக்கத்துடன் அல்லது விட்டுக்கொடுத்தலுடன்  மாணவர்களின்  தன்மையை,தேவையை,தகுதியை உணர்ந்து உள்வாங்கி தான் சார்ந்த  துறையில் அந்த மாணவர்களை எவ்வகையில்  ஊக்குவித்தார் என்பதிலேயே ஒரு ஆசிரியரின்  பணித்தகுதி அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் ஒவ்வொரு படிநிலைகளையும்,வளர்வுகளையும் தம் செயற்பாடுகளால் மெருகேற்றி அந்த சமூக அமைப்பை கட்டிக்காத்தலும் கூட ஆசிரியர்களையே பெரும்பாலும் சார்கிறது.ஒரு செயற்திறன் மிக்க ஆசிரியர் எவ்வாறு சமூகத்தை கையாளுவார்,அந்த ஆசிரியரை சமூகம் எவ்வாறு கையாளும் என்பதனை  பல சந்தர்ப்பங்களில் அனுபவமூடாக கண்டிருப்போம். அவ்வாறானதொரு அழகியல் அனுபவம் பேராசான் திரு. சின்னையா அழகேந்திரராஜா அவர்களின் பிரிவுபசார விழாவின் படங்களை பார்த்தபோதில் ஏற்பட்டது.
திரு சின்னைய அழகேந்திரராஜா ஆசிரியர் அழைத்துவரப்படுகிறார்.
                                                   
                                                           33 வருடங்கள் ஆசிரியராக,1979 ல்  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில் ஆரம்பித்த பணி 2012ல் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் 16வருடங்கள் ஒரே மகாவித்தியாலயத்தில் செயலாற்றி பிரதி அதிபராக  ஓய்வினை பெற்றிருக்கிறார்.
                                                             பிழையோ சரியோ அதனை சட்டென்று எடுத்துக்கூறி,முகங்களுக்காக அடங்கி போகாத ஒரு மனிதனாக, முரண்பாடுகள் எழுந்தாலும் அடுத்த கணமே  அவற்றை விலக்கி வைத்து உறவாடும் பண்பாளனாக,பலவற்றை கற்றுத்தத்திருக்கிறார் சமூகம் சார்ந்த நடவெடிக்கைகளில்.சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கு இவரைத்தவிர வேறுயாரிடமும் கண்டதில்லை.பொதுவாக எங்களது ஆசான்களை பெயரோடு சேர் என்று தான் இணைத்து சொல்லுவோம்.பயம் கலந்த மரியாதை அங்கே  இருக்கும். நல்லாசான் திரு அழகேந்திரராஜா அவர்களைமட்டும் வாத்தியார் என்று அழைப்போம்.அதில் பயமிருக்காது அன்பு நிறைந்திருக்கும்.
ஆசானும் அவர்தம் பாரியாரும் அதிபர் சிறி நடராஜா (இடதுபக்கம் )
                                                 
                                                            33 வருடங்கள் மாணவ சமூகத்துக்காக செயலாற்றிய ஆசான்,இனி தான் சார்ந்து நிற்கும் சமூகத்தின் வளர்வுக்கும், எழிச்சிக்கும் பெரும் செவையாற்ற,அவருக்கு வல்லமைகளையும், நீண்ட நலத்தினையும் கொடுத்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.
பிரியாவிடை நிகழ்வில் ஆசான்  (படஉதவி பதிவர் வல்லைவெளி )
                                             
எமது கிராமத்தின் பெருமகனின் பணி  ஓய்வினை முன்னிட்டு  தொண்டைமானாறு விரகத்திப்பிள்ளை  மகாவித்தியாலய சமூகத்தால் நடாத்தப்பட்ட   பிரிவுபசார நிகழ்வை பதிவு செய்த வல்லைவெளி (http://vallaivelie3.blogspot.fr/2012/07/blog-post.html) பதிவருக்கு எம்உறவுகள் சார்ந்த நன்றிகள்.
                                                             

                                          

9 comments:

 1. நல்லாசான் அவர்க்ள் நீண்டஆயுளுடனும்
  நல்லாரோக்கியத்துடனும் இன்றுபோல என்றும்
  சிறந்து வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.ரமணி
   நிச்சயமாக உங்களின் அன்பான வாழ்த்துக்கள் அவரை சென்றடையும்.

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி. பகிர்ந்திருக்கிறேன்.

   Delete
  2. மிகவும் நன்றி. பகிர்வுக்கு.

   Delete
 3. பகிர்வுக்குநன்றி..

  ReplyDelete
  Replies
  1. வரவுக்கு நன்றி உறவே,இது என் கடமை.......

   Delete
 4. அவரிடம் நான் கற்றகா விடினும் என் முன் பள்ளிக் காலத்திலிருந்து அவரோடு பழக்கம்.. அவர் மகனும் நானும் ஒரே தரம் படித்துக் கொண்டிருந்ததால் அடிக்கடி சந்தித்து கொள்வோம்..

  மிகவும் அருமையான மனிதர்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக சுதா, அவருடன் கதைத்துக்கொண்டிருந்தால் நேரமே போவது தெரியாது.அறிவுரைகளை வலிக்காமல் சொல்லும் ஒரு ஆசிரியர்.நன்றி சுதா கருத்தாடலுக்கு

   Delete