Tuesday 11 September 2012

அதுபோதும் அதுபோதும்

அணிசெய்தன அணிகலன்கள் 
அணியாதவைகள் கோணிக்கிடந்தன_உனக்கு 
பணிசெய்திட பருவக்காற்றுக்களும்  
பாதையெங்கும்  தவமிருந்தன

கூந்தலில் குடியேறி
குலவையிட்டது மல்லிப்பூ _அங்கே 
செந்தணலில் விழுந்ததாய்
நொந்துபோனது ரோஜாபூ

வீரம்பேசி எழுந்த சூரியன்  
வீழும்வரை வெம்மை கொண்டது _தன்
ஓர்மம் குலைந்து ஒளியடக்கி  
ஓடி ஒளிந்தது மருகி.

மோகினி நீ மோகித்தவன் நான் 
மோகித்தல் மோகத்தால் அல்ல 
வாகினியுன் தேகவாகத்தால் அல்ல 
வான்மழையால் சுகமடைவது வானல்ல!!

நெருக்கங்கள் நெகிழ்வுகள் 
நமக்குள் வேண்டாம் ஏந்திழையே,
தெருக்கூத்தாகிட இதுவொன்றும்
தற்கால தாராளமயமாக்கலில்லை.

நெஞ்சில் இருத்தி ஒரு நேசம்
நெஞ்சுருக்கும் ஒருபார்வை 
அஞ்சுகமே, அதுபோதும் _என்காதல் 
அந்திமம் இன்றிநிலைக்க அதுபோதும் 

8 comments:

  1. Replies
    1. புதுக்கவியில் புதிய "மரபு"

      Delete
    2. நன்றி உண்மையில் .இதை ஒரு வகையில் ஊக்குவித்தது நீங்கதான் பாஸ் .......

      Delete
  2. நெஞ்சில் இருத்தி ஒரு நேசம்
    நெஞ்சுருக்கும் ஒருபார்வை
    அஞ்சுகமே, அதுபோதும் _என்காதல்
    அந்திமம் இன்றிநிலைக்க அதுபோதும்

    மிகவே கவர்ந்த வரிகள் இவை.வாழ்த்துக்கள் சொந்தமே!எல்லாம் உங்களுக்கு சவக்கடுவத கண்டு பூரிக்கிறேன் சொந்தமே!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. யார் அந்த அஞ்சுகம், ஒரு கவிதையின் பிறப்பு திறமையால் மட்டுமல்ல அநுபவத்தாலும் தான் பிறக்கிறது.
    மிகவும் அருமை, தம்பி தட்டச்சு செய்யும் போது பிழைகள் ஏற்படும், அவற்றை சரி பார்த்து சேர்ப்பது நல்லது,
    நோந்து-நொந்து ,தராளமயமாக்கலில்லை- தாராளமயமாக்கலில்லை

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா,நிச்சயமாக இனி கவனித்தே பதிவேற்றுவேன்.நன்றி அக்கா.
      நல்லா சொன்னிங்க அனுபவத்தால் என்று ..............
      இருந்தா உங்களுக்கு சொல்லாமலா இருப்பன்.
      நன்றி அக்கா வரவுக்கும் கருத்திடலுக்கும்

      Delete