Thursday 4 October 2012

ஹைக்கூ ............(முயற்சி இரண்டு)

சருகுகளை எரிக்காதீர்கள்
பாவம் நாளைய குழந்தைக்கான
மின்மினிப்பூச்சிகள்.




கலப்பை கீறிய நிலங்களில்
முளைக்கின்றன எலும்புக்கள்
ஈழதேசம்.

                                                                                                             
மாலை யாகியதால்
கசங்கியது மலர்
பிணத்தின் மேல்.




பசியாறும் பந்தியில்
பரபரத்தது மனது
வளையல் ஓசை


வேர்களும் இலைகளும்
தலையாட்டின மகிழ்ச்சியில்
ஏணைக்குள் குழந்தை 


                                பருவத்துக்கு வரும்
பறவைகள் பறப்பதில்லை
மனதை விட்டு.

                                                       
வேம்போ நுணாவோ
குரலில் பிசிறில்லை குயில்.
நான்.






இறந்த நண்பர்களுக்கு அஞ்சலி 
உதிர்த்தியது காற்று.
பூக்களை

                                                       


18 comments:

  1. எனக்கு பிடித்த மாதிரியே குட்டி குட்டியான கவிதைகள்.

    கலப்பை கீறிய நிலங்களில்
    முளைக்கின்றன எலும்புக்கள்
    ஈழதேசம்////

    ஒரு நீண்ட வரலாற்றை இரண்டே வரிகளில்
    அற்புதமாய் சொல்லி விட்டீர்கள்.


    ReplyDelete
    Replies
    1. நன்றி கலைவிழி.
      உங்களின் கருத்தாடல்கள் என் வளர்வின் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. வலிகளின் விளைவுகள் அவை
      நன்றி வரவுக்கும் கருத்திடலுக்கும்

      Delete
  2. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    அருமையான துளிப்பாக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா செல்வம்.
      உங்களின் வாழ்த்துக்காளால் இன்னும் என் இருப்பினை தக்கவைக்கும் துணிவு பிறக்கிறது

      Delete
  3. உங்களுக்கு அருமையாக ஹைக்கூ வருகின்றது தொடருங்கள்..!

    ReplyDelete
    Replies
    1. அண்ணர் முதலில் மரியாதையாக பேசவேண்டாம்.இந்த பதிவுலகத்துக்கு வர காரணமே நீங்கதான்.
      உங்களின் ஆதரவோடு தொடர்கிறேன் இடைக்கிடை வந்து விமர்சியுங்கள் நன்றி அண்ணர்

      Delete
  4. கவிதைக்கேற்ற படமா...?
    படங்களுக்கேற்ற கவிதையா...?

    அதை சொல்லுங்க முதல்லே... அருமை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. எழுதிப்போட்டு தேடியதும் உண்டு.
      படத்தை பார்த்த பின் எழுதியதும் உண்டு.
      நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  5. சூப்பர் ஹைக்கூக்கள் நண்பா....
    ஒவ்வொன்றும் அழகு
    அதிலும் ஈழதேசம் வலிக்குது

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பனே,
      வலிகளை சுமந்து இறக்கிவைக்கும் வழியில்லாமல் அலையும் நிலையில் தானே எல்லோரும்.
      நன்றி நண்பனே வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்

      Delete
  6. வேர்கள் பரப்பி நிற்பது நேற்கொலு ஆலமரம் மட்டுமில்லை, நேற்கொலு தாசனும் தான். குறும்பா விரிக்குது கருத்துக்கிளைகளை... வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
    Replies
    1. அந்த விழுதுகளில் உறங்கிய இனிமையை தருகிறது உங்களின் கருத்திடல்.
      (விழுதால அடிச்சமாதிரியும் இருக்கு)
      நன்றி நண்பனே ...

      Delete
  7. நிஜமாலுமே ரசித்தேன் உங்களின் ஹைக்கூ கவிதைகளை..

    ReplyDelete
    Replies
    1. நன்றி.வரவுக்கும் கருத்திடலுக்கும்.உங்களின் வரவுகளால் என் இருத்தல் இன்னும் நேசிக்கப்படுகிறது.நன்றி உறவே

      Delete
  8. எனக்கும் மிகவும் பிடித்த துளிப்பாக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உறவே, உங்களின் கருத்துக்கள் என் இருத்தலை இன்னும் நேசிக்க செய்கிறது.

      Delete
  9. வார்த்தைகளல்ல கண்ணீர்ன் கண்ணாடிகள்(கலப்பை கீறிய நிலங்கள்...).

    ReplyDelete
    Replies
    1. ஐயா மிகவும் நன்றி.எங்களின் தேசம் விதைகளை சுமந்திருக்கிறது ஒருநாள் முகிழ்க்கும் நன்றி ஐயா வரவுக்கு

      Delete