Thursday 25 October 2012

உல(தி)ராத காயங்கள்

வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த 
 நினைவுகளின்  வெதும்பல்கள் 
விளிம்பு நிலையொன்றில் 
முனகிக்கிடக்கும்,


பகலின் நிர்வாணத்தின் முன் 
கூனிக்குறுகிக்கிடக்கும் அவை
இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து
அதீதமான பிரவாகத்துடன் 
ஓரங்களை தின்னத்தொடங்கும்.

இரைமுகரும் எலியொன்றின்
அச்சம் கலந்த கரியகண்களை,
இரையாகும் தவளையொன்றின்
ஈன அவல ஒலிகளை
உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும்.

தகனமொன்றின் நாற்றங்களை
பின்னான எச்சங்களை 
அருகிருக்கும் இலைகளில்
படிந்திருக்கும் புகைகுறியீடுகளை
விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை
பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த
துர்தேவதைகளின் கொலுசொலிகள் 
நாளைமீதான வெறுப்பினை,

விதைகளை வெறுக்கும் விருட்சத்தின் 
வேர்களில் படிந்திருக்கும்  
ஒரு இலையுதிர்காலத்தின்  கண்ணீர்.



7 comments:

  1. வரிகள் நெகிழ வைத்தது...

    வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    நன்றி..
    tm1

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, வரவுக்கும் கருத்திடலுக்கும். ஊக்கம் தரும் உங்களின் வரிகள் என் இருத்தலை இன்னும் ஊக்குவிக்கும்.நன்றி

      Delete
  2. மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக நீண்ட நாளின் பின் உங்களை சந்திக்கிறேன். நன்றி நிலாமதி அக்கா.

      Delete
  3. அர்த்தங்களை தேடி அலைகிறேன்
    புரியாத எனக்கு புரிவதும் புதுமைதான்
    புரிவதற்காக புறப்படுகிறேன்
    புரிந்தபின் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நண்பனே இது எனக்கான தோல்வி என்றே மனம் விளைகிறது.
      நிச்சயமாக சந்தோசப்படமுடியவில்லை.இனி வரும் காலங்களில் மாற்றங்களை கொண்டுவர முயல்கிறேன்.
      என்றும் அன்புடன்

      Delete
  4. மிக அருமை
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    வாரம் இரு நட்சத்திர பதிவர்
    தினபதிவு திரட்டி

    ReplyDelete