Monday 26 November 2012

முத்தமிழ் காத்த மூலவர்கள்

 செங்கொடி சுமந்த செல்வங்கள் _இவர்கள்
சங்கத்தமிழ் காத்த செம்மல்கள்
வெங்களம் புகுந்த வேங்கைகள் _இவர்கள்
வீரத்தமிழின் மங்கள கீதங்கள்

தேகம் கரைத்த தெய்வங்கள் _எங்கள்
தேசம் சுமந்த விழுதுகள்
யாகம் நடத்திய அக்கினிபிஞ்சுகள் _எங்கும்
யாதுமாகி நிறைந்த தென்றல்கள்

முத்தமிழ்  காத்த  மூலவர்கள்_எம்
மூச்சாகி நிலைத்த காவலர்கள் 
நித்திலம் எங்கும்ஒளிரும் தாரகைகள்_எம் 
நினைவுகளில் வாழும் ஓவியங்கள். 

மலர்சொரிந்து மணியோலித்து விழிகலங்கி
முகம்துடைத்து அகல் ஏற்றுவோம்
தளர்வகற்றி தடையுடைக்குமொரு வழியெடுக்க
தலைநிமிர்த்தியொரு சபதமெடுப்போம் !!!

6 comments:

  1. சிறப்பு வரிகளுக்கு நன்றி...

    தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
    tm1

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன்.உங்களின் தவறாத வருகைக்கு எனது உளமார்ந்த நன்றிகள்

      Delete
  2. அழகான வரிகள்
    அழகான கவிதை......

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா,உங்களையும் இவ்வரிகள் கவர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்வே.நன்றிகள்

      Delete

  3. தேகம் கரைத்த தெய்வங்கள் _எங்கள்
    தேசம் சுமந்த விழுதுகள்
    யாகம் நடத்திய அக்கினிபிஞ்சுகள் _எங்கும்
    யாதுமாகி நிறைந்த தென்றல்கள்////////////// என்னிடம் வார்த்தைகள் இல்லை நேற்கொழுதாசன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமகன்,
      உங்களின் வரவுகளால் மிகவும் அகமகிழ்ந்துள்ளேன்.
      உங்களின் விமர்சனங்கள் என்னை இன்னும் வளமாக்கும் விமர்சியுங்கள்.
      அன்புகலந்த நன்றிகளுடன்

      Delete