கடந்துவிட முடிந்தாலும்
தொடர்கின்றன -ஒரு
பகல் நிலவைப்போல
சப்தங்களை இழந்த
சங்குகளாய் வெதும்புகின்றன
இன்றைய பொழுதுகளில் - இந்த
இதயத்தின் துடிப்புக்கள்..
உருவங்கள் கரைந்து மறைந்தும்
அழிந்திடாத
அழிந்திடாத
நதிக்கரை படுக்கைகளாய்
உள்நிறைந்து போகிறது
நேசிப்புக்கள்.
நேசிப்புக்கள்.
நேசிப்பின் வர்ணங்கள்
நீர்த்துப்போகாமல் அலங்கரித்து
வியாபித்துப்படரும் கனவுகள்,
பின்னான பொழுதுகளில்
நீர்த்துப்போகாமல் அலங்கரித்து
வியாபித்துப்படரும் கனவுகள்,
பின்னான பொழுதுகளில்
நேசிப்பையே ஈமத்தாழியாக்கி
அடங்கிக்கொள்கின்றன
நிதர்சனங்களின் வலிகளை சுமந்து
மௌனமாக,
இந்த
மௌனங்கள் திரண்டொரு பெரும்
ஒலிக்குறிப்பாய் எழும்
அது ஒருநாள்
நேசிப்புக்கான மரணத்தை
முகங்களில் அறையும்.
அளவிற்கு மீறி நேசிப்பு ஆபத்து...
ReplyDeleteஅளவான நிதரசனமான நேசிப்பு
ReplyDeleteஅவசியமே...
உவமைகள் அழகாக இருக்கின்றன சகோதரரே...