Sunday 5 May 2013

மாயமானாய் ஓடிப்போகாதேடி............

கண்ணுக்குள்ள
நிக்கிறியே -என்ன (னை)
விண்னுக்குள்ள
தள்ளுறியே,
அடியே......
எ எண்ணத்தில
தீய வைக்கிறியே........

செவ்விதழை
மடிக்கிறியே-என்ன(னை)
செவ்வாயில
புதைக்கிறியே,
கொடியே....
ஏஞ்சிந்தையில புது
சிந்துபாடுறியே...............

ஒத்திவச்ச
காணிய கடக்கயில
பத்தியெளும் பெருமூச்சு-உன்ன
பாக்கையில தோணுதடி!
பொத்திவச்ச
ஆசையெல்லாம்
முத்திவந்து முனுங்குதடி!!


நெத்தி சுருக்கி
நீ பாக்கையில
நெட்டுருகி போகுதடி!
எட்டுவைச்சு பாதகத்தி
நீ நடக்கையிலயென்
சத்திகெட்டுப்போகுதடி!!

மனச சுத்தி
அடிக்கிறியே
மலைய சுருக்கி
சுமக்கிறியே.......
கனவ அள்ளி
தெளிக்கிறியே
கையளவிடை
மறைக்கிறியே.......
ஊன உருக்கி -புது
உருவம் திரட்டுறியே
கானக்குயிலாய்
உருவேத்திறியே...........

சீனமதில் போல
நீளுதடி ஏக்கம்
வீணா போயிடுவேனோ
உள்ளுக்குள்ள வொருதாக்கம்
மாயமானாய்
ஓடிப்போகாதேடி
மயானத்தில என்ன(னை)
விதைக்காதேடி..........

4 comments:

  1. /// சீனமதில் போல
    நீளுதடி ஏக்கம்
    வீணா போயிடுவேனோ
    உள்ளுக்குள்ள வொருதாக்கம் ///

    ரசித்தேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மனச சுத்தி
    அடிக்கிறியே
    மலைய சுருக்கி
    சுமக்கிறியே.......//
    எவ்வளவு பலம் வேண்டும் ? அருமை

    ReplyDelete
  3. அருமையான மொழியாற்றல்.

    ReplyDelete
  4. நெத்தி சுருக்கி
    நீ பாக்கையில
    நெட்டுருகி போகுதடி!
    எட்டுவைச்சு பாதகத்தி
    நீ நடக்கையிலயென்
    சத்திகெட்டுப்போகுதடி!!
    //// ஒரு மார்க்கமாய்த் தான் திரியுறியள் கொழுவன் . கவிதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . தொடருங்கோ .

    ReplyDelete