Monday 17 June 2013

நியமம்.....

ஆலாபனையொன்றின்
சிதைவுகளிலிருந்து  எழுகின்றது
சீரான முனகல் ஒலியொன்று
இன்றைய  பொழுதுகளில்,

கரிய இருளூடு
அந்தரித்தலையும் மெல்லிய
வெண்மையொன்றை போல,

நீண்ட அமைதிகளை
ஊடறுத்து ஒலித்தோயும்
தெருநாயொன்றின் ஊளையைப்போல,

வைகறையொன்றை நோக்கி
தவமிருக்கும் ஒரு
பறவையின் பசியைப்போல,

நிகழ்த்திப்போகிறது
உணர்த்தமுடியாத
எதோ ஒன்றை,

மதர்த்தெழும் அடுத்தடுத்த பொழுதுகளில்
எழும் அச்சங்களை
தொலைக்கும் அபயகரமொன்றின்
ஓங்கார ஒலியை,

தடுக்கமுடியாத
ஊனங்களை  கடக்கும்
யாதார்த்த கணங்களில்
தேவகணங்களின் ஆதரவுப்பார்வைகளை,

எதிர்பார்த்து கிடக்கிறது
ஒலி எழுப்பிய அந்த சிதைவுகள்.
இருந்தபோதும்....................

ஆலாபனைகளூடான
நீடிக்கும் அந்த ஒலிமட்டும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
எல்லாவற்றையும் மீறி........


7 comments:

  1. உள்ளத்தின் ஊமைக் காயங்களின் உள்ளின்று ஒலிக்கும் வேதனை தாள முடியாதது. சிறப்பான படைப்பு

    ReplyDelete
  2. //இருந்தாலும்...// அருமையாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக மிக அருமை
    ஆலாபனையை மீறும் அந்தக் குரல்
    இப்போது எங்களுக்குள்ளும்...
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆலாபணை அருமையான முடிப்பு ஒலிகள் எல்லாம் எப்படி கூடிவருகின்றது கவிதையில்!

    ReplyDelete

  5. ஆலாபனையொன்றின்
    சிதைவுகளிலிருந்து எழுகின்றது
    சீரான முனகல் ஒலியொன்று
    இன்றைய பொழுதுகளில், ////// நியமத்தின் அபஸ்வர ஆலபனையைத் தேடி மனமோ களைத்து விட்டது . வாழ்துக்கள் கொழுவா .

    ReplyDelete
  6. வணக்கம் சொந்தமே!அந்த ஒலி தான் அடிக்கடி சொல்கிறது நாம் இன்னும் வாழ்கிறோம்என்று..அருமை சொந்தமே!

    ReplyDelete