Monday 30 September 2013

நாளொன்றின் வெற்றிடத்தில்.

மகரந்தங்களின் கண்ணீரும்
பருவம் தப்பிப்போன
பாலணுக்களின் திட்டைக்களும்
நிறைந்து கிடக்கின்றன தேன்களில்கூடுகளில்,

சுடர் தின்ற விட்டிலின் கனவுகள்
கருகி பரவுகின்றன

அழகோடு இயைந்த நிலவினைப் புணர
தேடியலைகிறான் சூரியன்
இரவினை கொன்றும் பிறக்கிறது
இரவும் நிலவும்.

இலைகளை வெறுத்த கிளைகளை
காத்திருக்கின்றன,
பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக,

சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின்
மடிகள் கறக்கின்றன
ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு,

அன்பு...
ஒருவர் மனம் நெகிழும்படி
மற்றொருவர் வெளிப்படுத்தும்
பாசமும் நேசமும் நட்பும் என்று
தெளிவாக வரையறை செய்கிறது அகராதி.

அநேக நாக்குகளில் வழிகிறது
துர்நாற்றம் சிலவேளைகளில்
விசமாகவும்.

அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும்
விடைகளை சுமந்து  அலைகிறான்
கேள்வியை தேடி
மனிதனொருவன்.

இப்படிதான்
நிறைந்து போகிறது
நாளொன்றின் வெற்றிடம்.

3 comments:

  1. பாசமும் நேசமும் நட்பும் என்று
    தெளிவாக வரையறை செய்கிறது அகராதி.//உண்மைதான்

    ReplyDelete
  2. அந்த அகராதியை அனைவரும் அறிய வேண்டும்...

    ReplyDelete
  3. மிக அருமை... மனதார ரசித்தேன்...

    ReplyDelete