Sunday 15 September 2013

காலம் எனதாகும்........

வாழ்தலின்  மீதான கனவை
தடயங்களின்றி உண்டு செரிக்கிறது
காலவேள்வியின் பெரும் தீ

தரித்த கருக்கள்
இமையொரங்களால் கசிந்து
இறந்துகொண்டிருக்கின்றன ..

சுவடுகளை உருவாக்கும்
தன்னெழுச்சியில் எழுந்த பாதங்கள் 
குத்திட்டு கிடக்கின்றன.

கால வேள்வி 
வாழ்தலின் மீதான கனவுகளை  
உண்டு செரிக்கிறது.

ஆகுதியாகிப்போன கனவுகள்
ஒருநாள்
வாழ்வின்  கனதி சுமந்து
பெருமழையாகிப் பொழியும்.

தாழிகளில் நிறைந்து
வன்மத்தோடு வழிந்து ஓடி.......

கனவுகளை தின்ற வேள்வியின்
சாம்பல் மேடுகளில்
பூத்துக்கிடக்கும் காளான்களை மகிழ்விக்கும்
துகள்களை உயிர்ப்பிக்கும்.

வண்ணமயமான
அந்தத் துகள்கள் ஒன்றாகி
திசைகளை கடக்கும் பறவையாகி எழும்.

அப்போது
காலம் எனதாகி இருக்கும்.


2 comments:

  1. நிச்சயமாக
    நம்பிக்கையூட்டிப்போகும் அருமையான கவிதை
    பகிர்ருக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்

    ///வண்ணமயமான
    அந்தத் துகள்கள் ஒன்றாகி
    திசைகளை கடக்கும் பறவையாகி எழும்.
    அப்போது
    காலம் எனதாகி இருக்கும்///.

    நம்பிக்கை வரிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete