Tuesday 15 October 2013

நாளை நானும்...

அடங்கிக்கிடக்கிறது.
என்றும் இப்படி கிடந்ததில்லை
இறகுகோதும்  ஓசையாவது கேட்கும்.
எதுவுமில்லை.

நேரம் அறியக்கூட  பர்ப்பதுண்டு
காலம் தப்பியதில்லை
ஒருபோதும்.

காலம்...??

எங்கே போயிருக்கும்,
இரைபோதாமல்
இன்னும் தூரம் போயிருக்குமோ
இணைகூடி இடம் மாறி இருக்குமோ
இரையாகி இருக்குமோ

இறகு உருத்தியும்,
எச்சமிட்டும்,
சுள்ளித்தடிகளை விழுத்தியும்,
தூண் விட்டத்தில் குறுகுறுத்து தலை புதைத்தும்,

எங்கே
போய் தொலைந்திருக்கும்.
"சனியன்" என்று வாய்விட்டு
திட்டவேண்டும் போல ஒரு உணர்வு.

காலம்
காத்திருப்பை சேமிப்பதில்லை.

சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும்
தவறி அலைகின்றன.
எச்சங்கள் காய்ந்து  துகளாகி
இல்லாமல் போகின்றன.
சந்தங்களால்,
குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து
வெறுமை  பரவத்தொடங்குகிறது.

பரவுகின்ற  வெறுமை
தின்னத்தொடங்குகிறது
ஒவ்வொன்றாக....
நான்,
இழந்து கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாக அந்த
கூடுதிரும்பாத பறவையின் நினைவுகளை.

நாளை,
நானும் கூடு திரும்பாவிட்டால் ...

4 comments:

  1. வணக்கம்
    சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும்
    தவறி அலைகின்றன.
    எச்சங்கள் காய்ந்து துகளாகி
    இல்லாமல் போகின்றன.
    சந்தங்களால்,
    குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து
    வெறுமை பரவத்தொடங்குகிறது.

    கவிதையின் வரிகள் மனதை நெருடியது .... அருமை வாழ்த்துக்கள்

    தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி ஒன்று இணையத்தளத்தின் ஊடாக நடைபெறுகிறது கவிதை எழுதுங்கள் பரிசு அள்ளிச் செல்லுங்கள் இதோ விதிமுறை படிக்க.முகவரி.

    http://2008rupan.wordpress.com/2013/09/05/%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/

    ReplyDelete
  2. முடித்த விதமும் அருமை... (திக்...!)

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாவ்.....

    வாழ்க்கையின் நியதி இதுதான்...

    பிரிந்துப்போன ஒவ்வொருவருக்காவும்
    இங்கு ஒருவர் வருந்திக்கொண்டுதான் இருக்கவேண்டும்...

    அழகிய கவிதை வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. முதலில் ஒரு ஆதங்கத்தோடு ஆரம்பித்த வரிகள்...
    நேரம் செல்லச் செல்ல.. திரும்பாத பறவையை...
    சற்றே ஊக்குவிக்கும் விதமாக அமைந்த வார்த்தைகள்
    மிக அருமை...
    எங்கே போய்விடும்..
    என்றேனும் இங்கே தான்
    நன்றாக இதன்வீடு என,...
    தேற்றிக்கொண்டும்..
    நம்பிக்கையை விதித்தும் போகிற
    ஆழமான வரிகள் தம்பி...

    ReplyDelete