Friday 1 November 2013

ஒரு தீப வலி

தீபாவளி...
 எத்தனை தீபாவளிகள் கடந்துவிட்டன..
அன்றும் ஒரு தீபாவளி நாள் தானே.
பச்சை உனக்கு பிடித்த நிறம். எனக்கு சிகப்பு.
அன்று நீ தேவதை போலத்தான், இல்லை தேவதையாகத்தான் தெரிந்தாய்.

யாருக்குத்  தெரியுமடி ?
அன்றுமுதல் எனக்கு தீபாவளி இல்லை என்று.
அந்த தீபாவளி மட்டும் வராமலேயே போயிருந்தால்...
அல்லது,
நீயாவது வராமல் போயிருந்தால்...
நானும் என் நண்பர்கள் போல ஒரு சராசரியாக
இன்று கொண்டாடிக்கொண்டிருப்பேன்.


வழமைபோல மடத்தில் நான்.
கோவில் வாசலில் நீ.
கொலுசுத் தாளத்துக்கு அசையும்
ஒற்றைப் பின்னல் அதில் சிகப்பு செம்பருத்தி.
எனக்குபிடிக்கும் என்றுதான்  புனைந்திருப்பாய்.

அழகியடி நீ.

என் தாடியையும் ,சிகப்பு உடையையும்  நீ வெறுப்பதை தெரிந்தும்
அப்படியே திரிந்தவன் நான்.
உன்னை கோபப்பட வைக்கவேண்டும் என்று.

நீ மட்டும் எனை அலைய விடவில்லையா என்ன?

காதல்...
என்ன சொல்ல,
எதுவுமே இல்லை ஆனால் எல்லாம் இருந்தது.
உடைந்தும், துடித்தும், வெடித்தும், மகிழ்ந்தும், விம்மியும்,வெதும்பியும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
எல்லாம் அறிந்தவன்,
இன்னும் நாயுடன் நிற்கிறான். நாய்.

யாருக்கடி தெரியும்?

அந்த  தீபாவளிக்கு "ஓம்" சொன்னவள்
அடுத்த தீபாவளிக்கு
இன்னொருவனுடன் தலைத்தீபாவளி கொண்டாடுவாய் என..

காதல்
உன்னைப் பொறுத்தவரை
ஒரு தீபாவளி ஆடைதான்.
அதுதான் மாற்றி விட்டாயோ ?

நல்லது
இன்றும் தீபாவளிதான்.
தாடியும் சிகப்பு உடையும் கூடவே  இருக்கின்றன...
கோபப்படத்தான்  நீ இல்லை.
ஆனால்
உன் நினைவுகள் இருக்கின்றன
நான் ஆறுதலடைய...


3 comments:

  1. ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
  2. என்றும் அழியாத ரணங்கள்..
    ஆற்றுவது கடினமே..
    உணர்வுகள் கொப்பளிக்கும் கவிதை தம்பி..

    ReplyDelete
  3. வலி .....!கடப்பது கடினமாயிருந்தாலும் நினைவுகள் பொக்கிஷம்.வாழ்த்துக்கள் நினைவுப்பகிர்விற்கு!சந்திப்போம் சொந்தமே!

    ReplyDelete