நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய்
உனது தேவை என்ன சூடான ஒரு கண்ணீர்த்துளியா ?
மரங்களின் மௌனத்தால்
பறவைகள் அழுகின்றன
யாருக்கு யார்
மெல்லியதாக பரவுகிறது ஒரு கேவல் ஒலி
என்ன நிகழ்ந்திருக்கும்..
ஒரு பகிரமுடியாத மரணம்
காமம் தீராத ஒரு கலவி
குறைந்த பட்சம்
இன்னொரு காதல் தோல்வி..
மெல்ல காற்று குளிர்கிறது
வானம் அழக் காத்திருகிறது
நனையக் காத்திருக்கிறேன்
மழையில் கண்ணீரில்
// ஒரு பகிரமுடியாத மரணம் //
ReplyDeleteபுரிகிறது...
காதல் தோல்வி // குறைந்தபட்சமா
ReplyDeleteஎன்னமோ போங்க