Thursday 27 March 2014

இவர்களுக்கிடையில் நானும்....

முகங்களுக்காக நெய்யப்படும்
புன்னகைகளின் ஓரங்களில்
கசிந்து கொண்டிருக்கிறது
மரணித்துப்போன கனவுகளின் வாசங்கள்..

முகவரிகள் மீது  பரிமாறப்படும்
வணக்கங்கங்களும்  வாழ்த்துக்களும்
கூசவைக்கிறது உடலையும், மனதையும்
இந்த நாகரீகத்தைப் போல..



எலும்புகளை  உருக்கியிளக்கும்
இந்த நிலத்தின் குளிரைக் கடந்தும்
எரிந்துகொண்டிருக்கிறது,
வெளித்தள்ள முடியாதவொரு வலி

புலர்வுகளும்  மறைவுகளும்
பருவங்களும் உருவங்களும்
மாறிக் கொள்ளும் பயணத்தில்...

வன்மங்களையும், வக்கிரங்களையும் தோல்களாக்கி,
அகதிப் போர்வைகளால் மூடிக்கொண்டவர்களின்
ஊர்க் கதைகளாலும்
ஏக்க விளிப்புக்களாலும்
அரைகுறைத் தூக்கங்களாலும்
நீண்ட தொடரூந்துகளும்
நிலக்கீழ் வழித்தடங்களும் நிறைந்து கிடக்கின்றன....

என்னையும் சுமந்துகொண்டு...

1 comment:

  1. //வன்மங்களையும், வக்கிரங்களையும் தோல்களாக்கி,
    அகதிப் போர்வைகளால் மூடிக்கொண்டவர்களின்
    ஊர்க் கதைகளாலும்
    ஏக்க விளிப்புக்களாலும்
    அரைகுறைத் தூக்கங்களாலும்
    நீண்ட தொடரூந்துகளும்
    நிலக்கீழ் வழித்தடங்களும் நிறைந்து கிடக்கின்றன....///
    எப்போதும் போல் ஒவ்வொரு வரிகளும் உணர்வுகளை உருக்கி வார்க்கப் பட்டவை... அருமை தமி.. பாராட்டுக்கள்!!!

    ReplyDelete