Sunday 30 March 2014

நான் ஒதுங்கும் நிழல் நீ

காற்று கொதிக்கிறது
நீ மௌனத்தை கரைத்திருக்கிறாய்
மரங்களும் ஏரிகளும் கூட எரிந்துபோகலாம் இனி..

ஏன் இந்த இளவேனில் பொழுதில்
உன் விழிகள் துயரப் பாடலை கேட்கிறது..



நேற்றைய உறைபனிவிலக்கி,
ஒழுகும் கதிர்கள் தரைகளை தழுவுவதைப் பார்
வீட்டுக் கூரைகளில், இலைபோர்க்கும் மரங்களில்
மின்சாரக்கம்பிகளில்
பெயர் தெரியாத பறவைகளின் மகிழ்வைப் பார்

நீ புல்லாங்குழல்.
காற்றை புகவிட மறுக்கிறாய்..
தூசிகளை நிரப்பி பெருமிக் கிடக்கிறாய்
அநாதையாகி அலைகிறது நேற்றைய உன் குழலோசை..

நேற்றுக்கும் நாளைக்கும் இடைப்பட்ட
பொழுதொன்றை மென்றுவிட்டு போகிறாய்..

எப்போது அசைமீட்கப்போகிறாய்....?










1 comment: