Thursday 10 April 2014

துளிகளால் அழிதல்

வேர்முடிச்சுக்களில் ஒளிந்துகொண்டவனை
தின்றுவிட தயாராகிறது
பெரும் பூதமொன்று..

முதலில்
ஒற்றைத்துளியாகத்தான் விழுந்தது.

வெப்பத்தாலோ
காற்றாலோ ஆவியாகிவிடாமல்
அடையாளமாகிப் பூத்துக் கிடந்த
அந்த முதல் துளி
வெறுமையை உடைத்து
அலங்கரித்துக்கொண்டது தன்னை..



பின்னொரு பொழுதில்
நீண்ட பாலைநிலங்கடந்த வெப்பத்தோடு
இறங்கத்தொடங்கியது நிலைகொள்ளாமல்

இறகுகளை களைந்துவிட்டு
அடைக்கலமாக  அடம்பிடிக்க ஆரம்பித்து
சிதைவுகளால் ஊடுருவி
வேர்களால் பினைக்கத்தொடங்கியது.

மேகத்திலிருந்து
இறந்துபோன நட்சத்திரங்களின் ஆசைகளுடன்
பூதங்கள் இறங்கத்தொடங்கின..

நான் ஒளிந்து கொண்டேன்
வேர் முடிச்சுக்களில்...







No comments:

Post a Comment