Wednesday 30 July 2014

இனி வரும் காலம்

அரங்கேறிய இருத்தல்கள்
அலைகின்ற பெருவெளியில்
என் காலமும் ..

யுகாந்திரக் கூச்சல்களும்
வஞ்சிக்கப்பட்டவர்களின்  பெருமூச்சுகளும்
ஆசிர்வதிக்கப்படவனின் ஆசிகளும்
வழியெங்கும் நீர்த்துக் கிடக்க,


வேர்களில் தீசுமந்தும்
இலைகளில் நீர் சுமக்கும் மரங்களும்
சிறகுகளில் சுகந்திரத்தையும்
விழிகளில் வன்மத்தையும் தாங்கிய பறவைகளும்,
அடங்காப்பெரும் கோபத்தால் கதறியழும் விலங்குகளும்
அட்சதை தூவுகின்றன..

காலவதியாகும்
பரிணாமத்தின் மையத்திலிருந்து
ஒளி பெருந்திய முத்தமொன்று
என் கரங்களில் விழுகையில்,

தெறித்த காலமதுவின் ஒரு துளி
நட்சத்திரங்களில் இருந்து இறங்கிய
புன்னகையை தின்றுவிட்டிருந்தது.

இப்போது காலம்
என்னையும் மீறி அடை காத்திருக்கிறது
பிரசவித்துவிடலாம் இந்தப் பயணத்தில் சில நேரம்...
சாத்தான்களையும் சில நேரம்...


3 comments:

  1. வணக்கம்
    அழகிய கவிகண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறந்த உணர்ச்சிப்பா
    தொடருங்கள்

    ReplyDelete
  3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete