Thursday 21 August 2014

அந்த ஒருவனுக்காக காத்திருத்தல்.

பேசவேண்டும்
யார் இருக்கிறீர்கள்
வெறுமையாகிப்போன தேநீர்க் கோப்பையில்
நிறைகிறது என் குரல்.

நீங்கள் எனக்காவும் பேசுவதாக இருந்தால்
தேநீர்க் கோப்பையை கவிழ்த்துவிடலாம்
என் வெற்றிடங்கள் நிறைந்து கொள்ளும்.


எதைப்பற்றி பேசுவீர்கள்..
வழிக்காத என் தாடியைப் பற்றி
கசங்கிப்போன என் ஆடையைப் பற்றி
கிழிந்துபோன காலனி பற்றி
அருகில் இருப்பவரைப் பற்றி..

ஓ, நீங்கள்
என்னைப்பற்றி பேசவே மாட்டீர்களா?

ஓசைகளை கழற்றி எறிந்துவிட்டு
சொற்களை கொட்டுவீர்கள்
பின் எப்போது சிதை ஏற்றுவீர்கள்
நான் செத்தபின்பா
அப்போதாவது என்னைப் பற்றி பேசுவீர்களா என்ன.

எப்போதுதான் பேசுவீர்கள்
என்னைப்பற்றி?

எனக்குத் தெரியும்
உங்களால் பேசவே முடியாது.
ஏனென்றால்,
நீங்கள் உங்களிடம் சரணடைந்திருக்கிறீர்கள்
நான் உங்களிடம் சுகந்திரமாக இருக்கிறேன்.

என்னால் பேச முடியும்
ஒவ்வொருவரிடமும் சுகந்திரமாக இருப்பதால்,
ஒவ்வொருவரும் ஒருவராகவே இருப்பதால்,

இருந்தும்
நான் பேசப்போவதுமில்லை,
எனக்குத் தேவை
இப்போது ஒருகோப்பை தேநீர் மட்டுமே.

2 comments:

  1. கவிதை அருமை பேசுதல் அரசியல் போல!ம்ம் காத்து இருப்பு தேனீர் போல!

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete