Saturday 8 November 2014

கால வழு

காலம் உலர்த்த மறந்த நீர்
விரல்களில் ஒட்டிக் கொண்டது
தன்னிலை பகிராமல்..

வலிந்த
வெப்ப இழப்பினை உருவாக்கி,
திரட்டத் தொடங்கியது
ஆதிச் சிதைவுகளை,


ஈமத்தாழிகளையும்
வண்டல் படுகைகளையும் கிளறி,

சூரிய நட்சத்திரங்களுடனும்
கனியாத கருமேகங்களுடனும் உறவாடி,

காற்றில்
நெருப்பில்
உப்பு நீரில்
நுகர்ந்தும் எரிந்தும் மூழ்கியும்,

இழந்துபோன
ஈரலிப்பை தேடி அலைந்தது..

வழியெங்கும்..

வர்ணக் கலவைகளாலும்
நறுமணப் பூச்சுகளாலும் தரவேற்றிக்
கலையாடிக்கொண்டிருந்தன சில.

அதீத மோகத்துடன்
காலத்தை கலவி செய்து கொண்டிருந்தன சில.

ஆதியின் அன்புப் போர்வைக்குள்
சிக்கிப் பிணமாய் கிடந்தன சில.

இன்னும் சில
கௌரவ வெற்றிடங்களில்
எதிரோலியோடு மோதிச் சாவடைந்து கிடந்தன.

பெருமூச்சோடு
காலம் மீதான வன்மத்தையும்  வெளித்தள்ளிவிட்டு
மௌனம் கலைக்க முயன்ற கணத்தில்,

கண்டடைந்தது
தற்கொலை செய்துகொண்ட மனிதத்தை...






3 comments:

  1. சீர்கெட்டுப்போன நேயமற்ற மனிதத்தால்
    கீறப்பட்ட மாறாத வடு இந்த வழு....
    அருமையான கவியாக்கம் தம்பி...

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. சிக்கிப் பிணமாய் கிடந்தன சில// ம்ம் என்ன சொல்வது இதுதான் யாதார்த்த்ம். கவி அருமை.

    ReplyDelete