Tuesday 24 July 2012

இயங்குதலே இயக்கமாக .............

ஆதாளபாதளமொன்றின் இருளுக்குள் 
ஊசலாடிக்கொண்டிருக்கிறது 
வாழ்வியலின் தொன்மம் 
சுவாசக்காற்று தேடி..... 


மௌனத்தின் அலறல்கள் 
ஊழிக்கால ஒத்திகையாய் 
மெல்லமேலெல_அது 
யாருக்கும் தென்படாத
ஆழிக்கண்ணியின் வர்ணனைகளாய்
பேசுபொருளாகிறது !!


சாத்தியமில்லாத கற்பித்தலால் 
வாழ்வியல் இரகசியத்தை 
ஒப்புவிக்கிறார்கள் திகம்பரதேச சம்சாரிகள்.

நிசப்தமிழந்த மனவெளியில் 
காலப்புரவி கடந்த காலடிகளும் 
கிளறிச்சென்ற புழுதிகளும் 
ஒப்புவிப்புக்களையெல்லாம்
ஓரங்கட்டி நிலைத்திருக்கின்றன வடுக்களாக,

நாளைதாண்டிய நாளையொன்றில் 
தொன்மத்தின் அர்த்தரேகைகள்  
புரிபடக்கூடும்_இருந்தாலும்,
இன்றையை தோல்வியாகிக்கொள்வதில்  
அமைதியாகி விடப்போவதில்லை!!!!!









7 comments:

  1. நிம்மதி தேடும் மனநிலையில் ஒரு கவிதை.மனம் புலம்புகிறது !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் விமர்சனங்கள் எனை இன்னும் புடம் போடும்
      மனம் திறந்து விமர்சியுங்கள் .......
      நன்றி அக்கா வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும்.

      Delete
    2. உங்களின் விமர்சனங்கள் எனை இன்னும் புடம் போடும்
      மனம் திறந்து விமர்சியுங்கள் .......
      நன்றி அக்கா வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும்.

      Delete
  2. ஃஃஃசாத்தியமில்லாத கற்பித்தலால்
    வாழ்வியல் இரகசியத்தை
    ஒப்புவிக்கிறார்கள் ஃஃஃஃ

    உண்மையில் எவராலும் முடியாத ஒன்று அவர்களாக உணர்ந்தாலே புரியக் கூடியது...

    ReplyDelete
    Replies
    1. சிலவேளை உணர்ந்தால் வாழ்க்கை எப்படியாகுமோ ?
      பயமாயும் இருக்கு நண்பனே .............
      நன்றி மதிசுதா கருத்துப்பகிர்வுக்கு .

      Delete
  3. உண்மையில் தங்கள் சிந்தனைச் செறிவும்
    சொற்களைப் பயன்படுத்தும் லாவகமும் என்ன்னைப்
    பிரமிக்கச் செய்து போகிறது
    நீங்கள் அதிகமும் எழுத வேண்டும்
    அது அதிகப் பேரிடம் சென்று அடையவும் வேண்டும்
    அதற்கு குறைந்த பட்சம் வாரம் இரண்டு படைப்புகளாவது
    தரவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டும்
    குறைந்தது நாள் ஒன்றுக்கு ஐந்து பதிவுகளாவது சென்று
    படித்து பின்னுட்டமிடவேண்டும் என உறுதியும்
    எடுத்துக் கொண்டால் போதும்
    நிச்சய்ம தங்கள் திறன்
    மென்மேலும் பளிச்சிடும்
    பதிவுலகில் நிச்சயம் நீங்கள் சாதிப்பீர்கள்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மிக அதிகமான சுமையொன்றை தந்துள்ளீர்கள் ஐயா,உண்மையில் புலம்பெயர்ந்தபின்,எழுத்துக்களும் வாசிப்புக்களும் மிக அதிகமாக குறைந்து போயுள்ளதை கவலையோடு தான் அனுகிக்கொண்டிருக்கிறேன்.நேர பங்கீடுகள்,வேலைசுமைகள் அழுத்தங்கள் என ..................
      நன்றி ஐயா உங்களின் கருத்துக்கள் எனை இன்னும் இன்னும் இருக்கதூண்டுகிறது .............எழுத்துலகில் பதுவுலகில்
      நிச்சயமாக கவனத்தில் கொள்கிறேன் ...........அன்புடன்

      Delete