Sunday 2 September 2012

கல்லறை இதயம்......

ஆத்மபலத்தின் அடிவாரத்தை
இலக்கு வைத்து அறையப்பட்டது
மிக மிக பலவீனமான உளிகள்..................

நெளிந்தும் வளைந்தும் 
ஊடுருவிய உளிகள் 
வேர்களிடையிருந்த வெப்பத்தால் அஞ்சி 
கருக்கத்தொடங்கின கிளைகளை 
கொஞ்சம் கொஞ்சமாக,

ஊதிப்பெருத்த நினைவுகள் 
உன்மத்தங்கொண்டலைந்து 
காலக்கிழவியின் அரவணைப்பில் 
அழத்தொடங்கியது தன்னையிழந்து,

சந்திரசூரிய வியாபிப்புக்களை இழந்துபோய் 
மின்மினிப்பூச்சிகளின் இறக்கைகளில் 
இறங்கிக்கொண்டது ஆதிவெம்மை 
அடங்கிப்போய் ............................

கண்களால் வளர்த்த கனவுகளுக்கு 
கண்ணீரால் தூக்கழித்து 
துயவளாக்கிக்கொண்டவளே,

உச்சரிக்கப்பட்ட கணத்திலேயே 
தற்கொலை செய்துகொள்ளும் 
தீமூண்ட வார்த்தைகள் _உனை
தீண்டிவிடக்கூடாது என்பதற்காய் 
தோண்டிக்கொண்டிருக்கிறேன் 
இதயத்திலேயே புதைத்துவிட .................




 

9 comments:

  1. அழகான வரிகள் தலைவா......

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா,முதல் வரவும் வாழ்த்தும் என்றும் இனிமையானவை.நன்றி நண்பா

      Delete
  2. தீமூண்ட வார்த்தைகள் _உனை
    தீண்டிவிடக்கூடாது என்பதற்காய்
    தோண்டிக்கொண்டிருக்கிறேன்
    இதயத்திலேயே புதைத்துவிட //

    மனம் கவர்ந்த வரிகள்
    உணர்வுப்பூர்வமான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ரமணி அண்ணா,
      உங்களின் வாழ்த்துக்களும் கருத்துக்களும் என் இருத்தலை இன்னும் வளமாக்குகின்றன
      நன்றி

      Delete
  3. வார்த்தைகளில் எப்படித்தான் இத்தனை கனத்தை சேர்க்கின்றீர்களோ தெரியவில்லை. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பனே,
      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வுகள்.உங்களுக்கு கனமாக தெரிபவை சிலருக்கு வேறுமாதிரியும் தெரியலாம் ......
      விடுங்க பாஸ் ............
      நன்றியப்பா ஒரு சின்னப்பொடியனின் பதிவுக்கு கருத்து சொல்ல முன் வந்தமைக்கு.

      Delete
  4. தோண்டிக்கொண்டிருக்கிறேன்
    இதயத்திலேயே புதைத்துவிட ...//ம்ம் வலியும் வேதனையும் மிக்க உணர்வு சகோ!ம்ம்

    ReplyDelete