Thursday 31 October 2013

தவிப்பு...

வானம் தீப்பிடிப்பதற்கு சற்று
முன்னான கணத்தில்தான்
அது நிகழ்ந்தது.
முன்னெப்போதுமில்லாத வாசத்தில் 
பெய்திருக்கிறது நேற்றிரவு மழை.
இந்த சந்திப்பைப்போல....
இறகு விரித்து தேவதைகள் கடக்கின்றன
தலைக்கு மேலே..
இதயத்துக்கு  உள்ளே...
இலைகளின் குரல்கள் சுமந்து வருகின்றன
மலர்களின் மகிழ்ச்சியை.
நான் தேடத்தொடங்க,
நீ கடந்து விட்டிருந்தாய்.
வானமும் தீப்பிடித்துவிட்டது.
வேர்க்கிறது கழுத்தில், கண்ணில்.
மரமும் அமைதியாகிவிட
கூடு காத்திருக்க தொடங்குகிறது.
சென்ற பறவை வருமா ?

3 comments:

  1. அருமை... நம்பிக்கையுடன் தவிப்பை தவிர்ப்போம்...

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சில நேரங்களில் காத்திருப்பு அவசியமாயும்
    தோன்றுகிறது..
    ஆயினும் தவிப்புடன் காத்திருப்பு கொஞ்சம்
    வெறுப்பினை உமிழ்ந்துதான் போகும்...
    தவிப்பு உங்கள் கவிதையில் மிகவும் யதார்த்தமாக உள்ளது தம்பி..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. சென்றபறவை வருமா!ம்ம் காத்திருப்புக்களும் நல்லதுக்குத்தான்.அருமையான கவிதை

    ReplyDelete