Tuesday 24 December 2013

வன்மம் புணர்ந்த பிரியம்.

நேசிப்பின் நிழல்களில் ஒதுங்குதல்
சாத்தியமிழந்த பொழுதொன்றில்
தீப்பிடித்த வடுக்களால்
வேர்களில் சாம்பல்நெடி...

காயங்களையாற்றும் காலம்
இந்தக் காலத்தையும் அனுப்பியிருக்கலாம்..
வறண்ட நிலத்தின் மேல்
திரியும் கருமேகங்கள் போல..

என் தோட்டத்தின் சாம்பல் மீதிலும் பூக்கள்.

நீண்ட தெருக்களை
விலகி நடக்கத் தொடங்குகிறேன்..
காற்றும் ஒளியும் தழுவிப் போகின்றன.
பறவைகளின் பாடல்கள் நெருக்கமாகின்றன
கடல் விரிந்து கிடக்கிறது.

மூழ்கடிக்கவும் மூழ்கிப்போகவும் முத்தெடுக்கவும்
பிரியமும் கடலும் தான்  இருக்கின்றன


நான்
நேசிக்கப்படுகிறேன் !!!

என்
பிரியத்தின் இழைகளில்
வலைபின்னி காவலிருக்கிறது
சுமக்கவியலாத கனத்தோடு மர்ம சிலந்தியொன்று.
இன்னொரு பிரியத்தை கொன்றுவிடுவதற்காக
அல்லது வடித்து விடுவதற்காக...

இப்போது
என் தோட்டத்துப் பூக்களின் கீழும்
செத்துகிடக்கின்றன
வழி மறிக்கப்பட்ட
அல்லது
மறுக்கப்பட்ட  பிரியங்கள்.

3 comments:

  1. வழி மறிக்கப்பட்ட
    அல்லது
    மறுக்கப்பட்ட பிரியங்கள்./மறுக்கப்பட்டவை அதிகம் தான் உணர்வுகள் புரியாத சிலந்திகள்.

    ReplyDelete
  2. வணக்கம்

    கவிதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete