Monday 19 November 2012

சகிப்புக்கு பின்னான வன்மங்கள்.......!!!


திணிக்கப்பட்ட  பாதையின் ஓரத்தில் 
படிந்திருக்கும் புழுதிகளின் ஓலங்கள் 
தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் 
இறுதி மூச்சுக்களாய் தீண்டும் 
ஒவ்வொருவரையும், 

அநாதரவான அந்த ஒலிகளின் 
ஆழத்தில் வியாபித்துக்கிடக்கும் 
நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தமொன்றின்
உறையாத கறைநிழலில்,
ஒடுங்கியடங்கிக்கிடக்கும் அவனது கனவுகள்
முகத்திலறைந்து போகும்.

வினோத திரையொன்றால் 
முகங்களை மறைத்துக்கொண்டு
ஒருவரை ஒருவர் விலத்திக்கொண்டிருப்போம்
எந்த சங்கடமுமில்லாமல்,

ஏற்கனவே 
திணிக்கப்பட்ட பாதையில்
விலத்திக்கொண்ட சுயவன்மங்கள்
சிரித்துக்கொள்ளும் சத்தமில்லாமல்........!!!!








6 comments:

  1. வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    நன்றாக முடித்துள்ளீர்கள்...
    tm1

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.
      உங்களின் பாராட்டுக்கள் என்னை இன்னும் நடை போட வைக்கும்.

      Delete
  2. வழக்கம் போலவே வார்த்தைகளை தேட வைத்துவிட்டீர்கள் வாழ்த்துவதற்கு....

    ReplyDelete
    Replies
    1. கனதியான வரிகளை சுமத்துகிறீர்கள் நண்பரே நன்றி

      Delete
  3. சகிப்பு என்ற சொல்
    பல வன்மங்களையும்
    சில விட்டுக்கொடுத்தல்களையும்
    காவு வாங்கிக்கொண்டே
    இப்புவியில் வாசம் செய்கிறது...

    அழகான ஆழமான வார்த்தைகளால்
    கோர்க்கப்பட்ட
    வீழ்ச்சியில்லாக் கவிதை சகோதரரே...

    ReplyDelete
    Replies
    1. சகிப்பு என்ற சொல்
      பல வன்மங்களையும்
      சில விட்டுக்கொடுத்தல்களையும்
      காவு வாங்கிக்கொண்டே
      இப்புவியில் வாசம் செய்கிறது.../////////////////
      அருமை உங்களின் சிந்தனை வீச்சுக்கு முன் இந்த கவிதை ஒரு சிறு துளி அண்ணா
      நன்றி வரவுக்கும் பாராட்டுக்கும்

      Delete