இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளில் அழிவுற்றதும் அலைவுற்றதும் மட்டுமல்ல, இன ஒருமைப்பாட்டின் மையமாக காலகாலமாக திகழ்ந்து வந்திருந்ததும் இன்றைய கிழக்கு மாகாணமாக உருவாக்கப்பட்டிருக்கும் நிலத்தொடர்ச்சித்தான். இந்த நிலத்தில்தான் மூவின மக்களும் உணர்வறக் கலந்து வாழ்ந்து களித்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்வு இன்று வெறுமனே வரலாற்றுப் பதிவுகளாகவும் வாய்மொழி கதைகளாகவும் மட்டுமே எம் முன்னே நிலவிவருவது எம் காலத்திய வரலாற்றுத்துயரம். இதன் விளைவும் அனர்த்தமும் எம் ஒவ்வொருவரின் தோள்களையே சாரும்.
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Friday, 27 April 2018
Tuesday, 11 June 2013
இது கோழிகளின் கதை......... (உருவகம்)
கோழிகள் கூட்டமாக வாழ்ந்த அந்த வளவுக்குள் தான் பூனையும் ஒருநாள் வந்து சேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை பிடித்து வசதியாக இருந்துகொண்டு அந்த வளவிலேயே கிடைத்த உணவுகளை உண்டு வளர்ந்தும் வந்தது. சும்மா கிடக்கிற இடம் தானே என்றும் மென்மையான வனப்பான தேகத்தைபார்த்தும், கவர்ச்சியான கண்களை ரசித்தும், அமைதியாக அரைகண்ணை மூடி தியானம் செய்யும் அழகையும் பார்த்து கோழிகள், ரொம்பவே நல்லவர் இருக்கட்டும் எங்களுக்கும் இவரால் மோட்சம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டன.
கோழிகள் எப்போதும் கொத்துப்படுவதும், கத்திக்கொண்டு திரிவதும் கிண்டி கிளறி களைத்துப்போனதும் அப்படியே அங்கினேக்கை சூடுகண்ட இடங்களில் கண்ணை மூடி சுகங்களை அனுபவித்தும் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தன. வளவுக்குள்ள இடைக்கிடை குரங்கு நரி நாய் போன்ற சில விலங்குகளும் அத்துமீறி வந்து தங்கட உணவு உள்ளிட்ட தேவைகளை நிறைவேறிக்கொண்டன. ஒருபக்கம் பூனையும், பூனைக்கு முதலே வளவுக்குள் குடி வந்த கோழிகளுக்கும் மற்ற விலங்குகள் வந்துபோறது கொஞ்சம் பிரச்சனையாக தான் இருந்தது. இந்த இடையில மூன்றாவதாக எப்படி வந்தது என்று தெரியாமலேயே காகக்கூட்டம் ஒன்றும் குடிவந்து சேர்ந்து கொண்டது. கோழி கிண்டுற இடத்திலும், பூனை தட்டி விழுத்துற இடத்திலுமாக தன் தேவைகளை நிறைவேற்றி வளமாக வாழத்தொடங்கியது காகங்கள்.
நாளும் பொழுதுமாக காலம் கடந்துகொண்டிருந்தது. காலமாற்றங்களை சாதகமாக்கிய பூனையும் கோழிகளை சீண்டத்தொடங்கியது. ஆரம்பத்தில் சும்மா சும்மா கோழிகளை பிடித்து செட்டைகளை பிய்ப்பதும் புடுங்குவதுமாக ஆக்கினை செய்யத்தொடங்கி அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அடித்து கொல்லதொடங்கியது. கோழிகளும் பயந்து நடுங்கி ஒதுங்க தொடங்கியதும் இரத்த ருசி கண்ட பூனை இன்னும் துள்ளத்தொடங்கியது.
கோழிகளும் நொந்து நூலாகி, சகோதரகோழிகளை காவு கொடுத்ததும், ஓடி ஓடி ஒளியத்தொடங்கின....கடைசியில் ஒளிய முடியாத நிலையில் எல்லா கோழிகளும் ஒன்று கூடின. ஒரே சத்தமும் ஒப்பாரிகளும் வீம்புப் பேச்சுகளும் வீராவேச கூச்சல்களுமாக ஒன்றுகூடின. கூட்டத்தில் யார் தலைமை தாங்குவது என்று முடிவெடுக்க முடியாமல் தங்களுக்குள் கொத்துப்பட்டுக் கொண்டன. ஒவ்வொரு கோழியும் தான் தான் தலைவன் என்ற ரீதியில் கூச்சல் போட்டுக்கொண்டன. பூனையை கண்டதும் மறைந்து கொள்வதும் பின் வந்து கொக்கரிப்பதாகவும் நடந்து கொண்டன. நிலைமையை அவதானித்த ஒரு கோழி தீர்க்கமான முடிவிவோடு எழுந்தது. அன்றிலிருந்து அடிவிளத்தொடங்கியது பூனைக்கு. பூனைக்கு அடி விழ அடிவிழ அந்த கோழிக்கு பின்னால் அநேக கோழிகள் செல்லத்தொடங்கின. கொஞ்ச கோழிகள் பூனையோடு சேர்ந்துகொண்டன.பூனையும் தன்னோடு சேர்ந்த கோழிகளை தட்டிகொடுக்கொண்டு மற்ற கோழிகளை கெட்டவர்களாகவும் கலகக்காரன்களாகவும் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டும் திரிந்தது. அதுமட்டுமில்லாமல் எந்தப்பக்தால கொத்து விழும் என்று தெரியாமல் தூங்கவும் முடியாமல் ஒரு இடத்தில நிலையாய் இருக்கவும் முடியாமல் தவிக்கத்தொடங்கியது. கடும் முயற்சி செய்து கோழிகள் பறந்து வந்தும் பூனையை தாக்க தொடங்கின.
கோழிகளின் கொத்தல் தாங்க முடியாமல் பூனை பக்கத்து வீடுகளில் இருக்கும் விலங்குகளிடம் போய் முறையிட்டு அழுது தொழுது உதவி கேட்டு அவைகளையும் அழைத்துக்கொண்டு வந்து கோழிகளை விரட்ட தொடங்கியது.கொஞ்சம் கொஞ்சமாக கலைக்க கலைக்க ஒதுங்கிய கோழிகளை கண்டபாட்டுக்கு சிதைத்துத் தள்ளியது பூனையோடு சேர்ந்த அயல் வீட்டு மிருகங்கள்.
கொஞ்ச கோழிகள் காணமல் போயின.....
கொஞ்ச கோழிகள் உயிரோடு புதைந்து போயின
கொஞ்ச கோழிகள் சிதைத்து போயின
கொஞ்ச கோழிகள் பூனையோடு போயின
கொஞ்ச கோழிகள் இயலாமையால் இருப்பை தொலைத்து போயின
கொஞ்ச கோழிகள் தப்பி ஆங்காங்கே போயின........
கொஞ்ச கோழிகள் மானத்தோடு ஓரமாய் போயின.......
பூனையோடு கலந்து போன கோழிகள் பாட்டும் கூத்துமாக கொண்டாட்டத்தில் திளைத்தன.
கொஞ்ச கோழிகள் கண்ணீரோடு மற்ற கோழிகளுக்காக
வாழத்தொடங்கின.
அப்பதான் முழிச்ச கொஞ்ச கோழிகள் மீண்டும் கொக்கரித்து கூட்டம் கூடத்தொடங்கின.......................
பூனையோடு கலந்து போன கோழிகளோடும் பூனை கொஞ்சம் கொஞ்சமாக தனகத்தொடங்கியது. ஒன்றும் செய்யமுடியாமல் அந்த கோழிகளும் பூனைக்கான தமது கொக்கரிப்பை குறைக்காமல் நீட்டிக்கொண்டது.
குழுக்களாய் இயங்க தொடங்கிய கோழிகளைப் பார்த்து தலையாட்டிக்கொண்டே இருப்பை தக்க வைத்துக்கொண்டது காகக்கூட்டம்.
மீண்டும் கொக்கரித்தொடங்கிய கோழிகள் மட்டும் மண்ணை கிளறி கிளறி காட்டி கொக்கரித்துக் கொண்டே பூனைக்கும் போய்வர செம்கம்பளம் விரித்துக்கொடுத்துக்கொண்டிருந்தன.....
கொஞ்சம் கொஞ்சமாக கோழிகள் சின்ன கரப்புக்கூடுகளை தமது வளவுகள் என்று சொல்லி அதற்குள்ளேயே கொக்கரிக்கத் தொடங்கின.
பின் அப்படியே
எல்லாம் மறந்து தலையை செட்டைக்குள் புதைத்து உறங்கத் தொடங்கின.
கோழிகளுக்கு இப்போது துன்பமே இல்லை என்று கத்தியபடி, பூனை தன் வாயில் இருந்த கறைகளை நக்கி அழித்துக்கொண்டது.
(பூனை கண்ணை மூடினால் ......................... கோழிகளும் அல்லவா கண்ணை மூடிவிட்டன)

Monday, 17 December 2012
அந்த இரவுகள் அழகானவை(ஒரு உரைநடைப்பகிர்வு)
இரவுகள் அழகானவை .
நிலாக்கால இரவுகளை விட, இருள் நிறைந்திருக்கும்
இரவுகள் மிக மிக அழகாவை.
சூழ்ந்திருக்கும் அமைதியை,
மென்மையான குளிர்பரப்பி தேகம் தொடும் தென்றலை,
இடையிடையே அருகில் இருக்கும் சிறு மரங்களின் இலை அசைவுகளை,
எதோ சிறு விலங்கின் காலடி பட்டு எழும் சருகுகளின் ஒலிகளை,
தொலைவில் தெரியும் நட்சத்திரங்களை,
குறுக்கும் நெடுக்குமாக பறந்துபோகும் இரவுப்பறவைகளை,
மின்சார கம்பிகள் மீது கூட்டமாகவும்,
தனியனாகவும் இருக்கும் காகங்களை,
குறுக்கும் நெடுக்குமாக பறந்துபோகும் இரவுப்பறவைகளை,
மின்சார கம்பிகள் மீது கூட்டமாகவும்,
தனியனாகவும் இருக்கும் காகங்களை,
இரசிக்க முடியும் இரவுகள் எப்படி அழகில்லாமல் போய்விடும்.
பகலொன்றின் இயக்கங்களின் வன்மைகளை தொலைக்கும்,
அடுத்த புலர்வின் அமைதியை விதைக்கும் இரவுகள் எப்படிதான் அழகில்லாமல் போகும்.
பகலொன்றின் இயக்கங்களின் வன்மைகளை தொலைக்கும்,
அடுத்த புலர்வின் அமைதியை விதைக்கும் இரவுகள் எப்படிதான் அழகில்லாமல் போகும்.
Tuesday, 4 December 2012
யாதொன்றினதும் கைதிகள் அல்ல.............
நிலம்கீறி வெளிவரும்
முளையங்களாய்
புலன்கீறி விழுமென் வார்த்தைகள் _என்றுமே
யாதொன்றினதும் கைதிகள் அல்ல,
ஒப்புக்காகவும்
ஒப்பனைக்காகவும்
அலங்கரித்துக்கொண்டவை என்றோ,
கற்பனைகள், சுமந்த கனவுகள் என்றோ,
தேவதைகளின் ஆசீர்வாதங்கள் என்றோ,
சட்டமிடவும் இயலவில்லை.
சில இரவுகளில் நிகழுமிந்த
ஒளிப்பகுப்பில்_என்
அந்தரங்க நிர்வாணத்தை ரசிக்கமுடிகிறது.
அந்த கணங்களில்,
அம்மணமாய் கிடக்குமென் மனவெளியில்
தேவதைகளின் கொலுசுகள்
ஓசைலயமிடுகின்றன.
ஆழ்ந்த பெருமூச்சுக்களை
வெளியேற்றும்_இந்த
பிரசவிப்பின் பின்னான வெற்றிடத்தில் குடியேறும்
ஆத்மதிருப்தியின் வாசம்
அலாதியானது. அமைதியானது.
இதுவெல்லாம்
எனக்கானது.
நீ என்
இடத்தில் இருந்தால் உனக்கானது.
இப்படித்தான்
கடந்துபோக முடிகிறது
காலங்களையும் கவிதைகளையும்
உன்னால் என்னால் அவர்களால்
தெருவோரத்தில் விழுந்த சில்லறை
Monday, 19 November 2012
சகிப்புக்கு பின்னான வன்மங்கள்.......!!!
திணிக்கப்பட்ட பாதையின் ஓரத்தில்
படிந்திருக்கும் புழுதிகளின் ஓலங்கள்
தற்கொலை செய்துகொண்ட ஒருவனின்
இறுதி மூச்சுக்களாய் தீண்டும்
ஒவ்வொருவரையும்,
அநாதரவான அந்த ஒலிகளின்
ஆழத்தில் வியாபித்துக்கிடக்கும்
நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தமொன்றின்
அநாதரவான அந்த ஒலிகளின்
ஆழத்தில் வியாபித்துக்கிடக்கும்
நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தமொன்றின்
உறையாத கறைநிழலில்,
ஒடுங்கியடங்கிக்கிடக்கும் அவனது கனவுகள்
முகத்திலறைந்து போகும்.
வினோத திரையொன்றால்
முகங்களை மறைத்துக்கொண்டு
ஒருவரை ஒருவர் விலத்திக்கொண்டிருப்போம்
எந்த சங்கடமுமில்லாமல்,
ஏற்கனவே
திணிக்கப்பட்ட பாதையில்
விலத்திக்கொண்ட சுயவன்மங்கள்
சிரித்துக்கொள்ளும் சத்தமில்லாமல்........!!!!

Friday, 2 November 2012
மைகளாலும் புணரப்படுபவள்........... !!
விழியோரங்களில் மலரும்
துளிப்பூக்களின் வாசங்களை
மொய்த்துரீங்காரமிட்ட நோக்கல்களை,
கணநேர ஈனப்பிதற்றல்களை,
பொய்நாக்குகளின் வீணிகளை,
விலக்கி சீராக்கமுடிகிறது
படுக்கையொன்றை இலகுவாக அவளால்.
இது
திணிக்கப்பட்டதா என்றாலும்
தவிர்க்கமுடியாதா என்றாலும்
தெரியாதென்பதே பதிலாகுகிறது.
வகையறியும் பார்வைகளை
தகையுரியும் நாவுரைகளை
முகைகருக்கும் வசவுகளை
பகைபெருக்குமோர் பல்லவிகளை
நகைத்தேவிலக்கி யுள்யெரிதலவள் வழக்காயிற்று.
தினவெடுத்த மிருகங்களின்
தினவெடுத்த மிருகங்களின்
நாவுகளில் படிந்திருக்கும்
அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள்,
தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில்
இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்
இவள்
உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின்
உயிரிருப்பினால் இன்னும்
உயிரோடிருக்கிறது சில மனிதர்களின் சந்ததி.
அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள்,
தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில்
இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்
இவள்
உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின்
உயிரிருப்பினால் இன்னும்
உயிரோடிருக்கிறது சில மனிதர்களின் சந்ததி.
நாளையிவளின்,
வரலாறொன்றின் கடைசி எழுத்துக்களின்
வடிவமும் சிதைக்கப்பட்டிருக்கலாம்,
எழுதுபவரின் ஆத்மதிருப்தியின் பொருட்டு.
Monday, 15 October 2012
வேர்கள் அ(ழு)லைகின்றன
மழைக்கூதல்
தேகம் தீண்டிப்பரவியவள்
சோம்பல் கலைத்தது.
கிளைகளின் ஆலாபனை
கிளைகளின் ஆலாபனை
இடம்மாறும் புறாவின் குறுகுறுப்பு
கடகத்துள் கிடந்த நாயின் முனகல்
கட்டையை சுற்றும் ஆடுகளின் அரவமென,
அறிகுறிகளால் அவஸ்த்தைகளை
உள்வாங்கி இயங்கத்தொடங்கினாள்.
அள்ளிவந்திருந்த
கொக்காரை பன்னாடைகளை
தாவரத்து ஓரம்தள்ளி
மழைநீரேந்த பானைகளை அடுக்கி,
தூவானம் தொடாதவிடத்தில்
தூவானம் தொடாதவிடத்தில்
காயாத ஆடைகளை கட்டி,
உவனிக்காதவிடம் பார்த்து
அடைக்கோழியின் கூட்டையரக்கி,
பெருமூச்சுடன் வான்பார்க்கையில்
விழுந்தது துளிகள் முகத்தில்.
பாத்திரங்களில் ஒழுக்கு நீர்
ஒசைலயத்துடன் விழ,
தெறித்ததுளிகளால் நனைந்தது நிலம்
சாம்பலற்ற அடுப்போரம்
வாயிலேதுவுமின்றி வரிசையிட்டன எறும்புகள்.
சன்னங்கள் துளையிட்ட சுவரில்
ஈரத்தின் நரம்புகள் பரவத்தொடங்கின.
சட்டமிடப்பட்ட மகனின் படத்தை
கழற்றியிருபுறம் துடைத்தாள். பார்த்தாள்.
கேணல் சுடரவன்.
தடவினாள் சுருக்கம் விழுந்த
விரல்களால் பெயரை.
விரல்களால் பெயரை.
செய்தி ......................................!!!!
மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகள்
புலம்பெயர் தேசங்களில் வெகுவிமர்சையாக
புலம்பெயர் தேசங்களில் வெகுவிமர்சையாக
Saturday, 6 October 2012
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகளில் மக்களின் பங்களிப்பு.......
தமிழரின் பூர்விக தாயக நிலங்களில் முக்கியமானதும்,பல்லினப்பரம்பல் கொண்டதுமான கிழக்கின் மாகாணசபை தேர்தல் முடிந்து பெருத்த ஏமாற்றங்களையும்,சலிப்புக்களையும் உருவாக்கி, மீண்டும் மீண்டும் தமது பதவி மற்றும் அரசஅதிகார மையங்களுக்கான அடிபனிவினை மேற்கொள்ளும் அரசியல்வாதிகளின் கேவல முகங்களை வெளிக்காட்டி இன்று கொஞ்சம் ஓய்ந்து போயுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு தேர்தல் களமிறங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேர்தல் முடிவுகளுக்கு பின்னான மேற்கொண்ட அரசியல்முதிச்சி அற்ற செயற்பாடுகள் பெருத்த விசனங்களையும், நம்பிக்கையீனங்களையும் புலத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. முஸ்லீம்காங்கிரசின் கபட அரசியல் வியூகங்களை நாடிபிடித்தறிய முடியாத நிலையில் இன்னும் தமிழ்தலைமைகள் இருப்பதையிட்டு இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமானதும் அமைதியானதுமான ஒரு தீர்வினை நோக்கி நகரமுடியுமா என்ற ஐயங்களை உருவாக்குகிறது.இது இவ்வாறு இருக்க,
சமகாலத்தில் மீளவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள் ஒலிக்கத்தொடங்கி விட்டது. இம்முறை கொஞ்சம் பலமாக.பொதுவாக தேர்தல்களுக்கு முன்பாகவும் பின்பாகவும் இவ்வாறான கோசங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய அங்கத்துவ கட்சிகளால் எழுப்பப்படுவது வழமையாகிவிட்டது 2009 களின் பின்பாக. கிழக்கின் வேட்பாளர் தெரிவுகளில் அங்கத்துவ கட்சிகளுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் மிகுந்த சர்ச்சைகளை உள்ளரங்கில் உருவாக்கியிருந்தன. இந்தநிலை வடக்கு மாகானசபை தேர்தலிலும் உருவாகிவிடக்கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி தவிர்ந்த அங்கத்துவ கட்சிகள் மிகுந்த முனைப்புடன் செயற்படுவதையே உள்ளார்ந்து உணரமுடிகிறது. ஒரு இதயசுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தனித்துவ கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை மாற்றியமைக்க முயல்வது போல காட்டிக்கொண்டு தங்களின் அரசியல் இருப்பினை தக்க வைக்கவே அதிகம் முனைகிறார்கள் எனலாம். தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு .ஆனந்தசங்கரி அவர்களை முன்னிறுத்தி நகரும் இவர்களின் நகர்வானது தற்போதைய பாராளுமன்ற குழுத்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தெரியப்படாத தலைவருமாக இயங்கிக்கொண்டிருக்கும் சம்மந்தன் அவர்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து பணிய வைக்கும் ஒரு நகர்வாகவே இருக்கும்.
தமிழ் மக்களின் ஒரே தெரிவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்ததற்காகன ஒரே காரணம் தமிழ் மக்களின் அபிலாசைகளை, தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றிடம் உருவாகாமல் புலத்திலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரத்துடன் செயல்படுவதற்கான ஒரு கட்டமைப்பாக விடுதலைப்புலிகளின் அனுசரணைகளுடன் உருவாக்கப்பட்டதே ஆகும் . இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புள் அங்கத்துவம் பெற்றிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் வாழ்நாள் பாரளுமன்ற உறுப்பினர் என்று அழைக்கப்படும், கூட்டணியின் தலைவராகவும் இருந்த மு.சிவசிதம்பரம் அவர்கள், தன் இறுதிக்காலத்தில் தலைவருக்கு தான் தொண்டன் என்ற கருத்தியலை முன் வைத்து இருந்தார் என்பதும் நினைவில் கொள்ளவேண்டிய விடயமாகும். ஆயுத போராட்டமானது மௌனிக்கபட்ட பின்னான நிலையில் ஏற்பட வெற்றிடத்தினை,பேரம் பேசும் ஆற்றலினை விடுதலைப்புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு நிரப்பி தொடர்ந்தும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் என தமிழ் மக்கள் நம்பினார்கள்.ஆனால் இன்று தலைமைத்துவ வெற்றிடத்தில் தங்கள் இருப்பினை தக்கவைக்கும் பொறிமுறையில் நம்பிக்கை வைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் ஒரு தனி மனித எச்சாதிகாரங்களால் வழிநடத்தப்படுவதை உணர முடிகிறது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் மீளவும் தமிழ் மக்களின் இருப்பினை ஆதால பாதளத்தில் தள்ளிவிடுவதாகவே அமையும். இந்த இக்கட்டான நிலையினை தவிர்த்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் ஒருமித்த குரலாய் ஒலிக்கவும், உலகநாடுகளுக்கு எம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுதியம்புவதற்காகவும் தமிழ் தேசிய கூட்டமைபின் அங்கத்துவ கட்சிகளிடம் ஒரு உள்ளார்ந்த அர்ப்பணிப்பு அவசியமாகும். அரசியல் இருப்பினை கடந்து தாம் சார்ந்து நிற்கும் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி செயற்படும் ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு மாற்றம் பெறவேண்டும்.அதற்கான உடனடித்தேவையாக கூட்டமைப்பின் மதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டு கூட்டமைபினை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் மத்திய குழுவில் மூன்றாம் நிலைத்தலைவர்கள் அல்லது புத்திஜீவிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுடாகவே கூட்டமைபின் எந்தொரு நடவெடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும். இங்கே மூன்றாம் நிலைத்தலைவர்கள் அல்லது புத்திஜீவிகள் என்பது, முன்னாள் ஆயுதக்குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சாராத மக்களின் மீது, மக்களின் அபிலாசைகள் மீது கரிசனை கொண்ட வாக்கு அரசியலையோ,அதிகார மையங்களையோ நாடாத கல்வியாளர்களை,சமூக ஆர்வலர்களை குறிப்பதாகவே இருக்கிறது.
கிழக்கின் மாகாண சபை தேர்தல்களுக்கு முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சு வார்த்தைகள் நடாத்திய சிவில் சமூகத்தினரால் எழுப்பட்ட கேள்விகளுக்கு தீர்க்கமான பதில் எதுவும் வழங்காத கூட்டமைப்பின் பேசவல்ல உறுப்பினர்கள், தேர்தல் முடிந்து கூட்டமைப்பினை பதிவு செய்தல் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அறிந்ததும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் ஆணையை யாருக்கும் மக்கள் வழங்கி இருக்கவில்லை என கூறி தங்களில் இருப்பினை தக்க வைத்துக்கொள்ள கேள்விகளை கேட்பவர்கள் மீது ஒரு வித துரோகிகள் பட்டத்தை கொடுக்க முன் வந்தனர்.மக்களின் ஆணையை என்றுமே கருத்தில் கொள்ளாது, மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காது, ஒரு பகிரங்க சந்திப்புக்களையோ,அல்லது கலந்துரையாடல்களையோ நிகழ்த்த மறுக்கும் கூட்டமைப்பின் சில எச்சாதிகார உறுப்பினர்கள் இவ்வாறு அறிக்கைள் விடுவதன் மூலம் தங்களின் இருப்பின் தன்மையை உறுதி செய்யவே முயல்கிறார்கள் என்பது ஆணையை வழங்கிய மக்களுக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் கூட்டமைப்பினை மத்தியகுழு ஒன்றினை உருவாக்கி அதனூடாக பதிவு செய்வதன் மூலம் தமிழரசுக்கட்சி தன் தகமைவாய்ந்த இருப்பினை இழந்துவிடும் என்ற அச்சமே காரணமாகும். இன்றைவரைக்கும் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து செயற்பாடுகளுக்கும் உரிமைகோரக்கூடிய நிலையில் இருப்பது தமிழரசுக்கட்சி தான். ஒருவகையில் நோக்கினால் கூடமைப்பின் அங்கதுவக்கட்சிகளின் அச்சத்துக்கு காரணமாக இதுவே இருப்பதையும் உணரலாம். மக்கள்நலன் அக்கறை கொண்டதாக காட்டிக்கொளும் இவர்களின் பயமும் தங்களின் இருப்புகள் மீதே இருப்பதை காணலாம்.உண்மையில் யாதார்த்த ரீதியாக நோக்கினால் இன்றைய அரசியல் தலைமைகள் தங்களின் நலன் மீது அக்கறை கொண்டு நகர்கின்றனவே தவிர மக்களின் நலன் மீது அல்ல என்பது தெளிவாகிறது.
இந்த நிலைகள் தொடரும் படசத்தில் தமிழர் அரசியல் அரங்கில் மீளவும் ஒரு பாரிய பெற்றிடம் ஒன்று உருவாகி, தமிர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கிவிடும் நிலை உருவாகும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலான தமிழர் போராட்டங்கள், தியாகங்கள் மறக்கடிக்கப்பட்டு, உயிர் சொத்து அழிவுகள் எல்லாம் பலனற்று போய்விடும். இந்த நிலை ஏற்படாதிருக்க வேண்டுமெனில், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களும், புலத்தில் தொடர்ந்தும் இயங்கு நிலையில் இருக்கும் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும் உடனடியான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் மத்திய குழு ஒன்றினை உருவாக்கி, அதனூடாக கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை கூட்டமைப்பின் இன்றைய தலைவர்களுக்கு உடனடியாக கொடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் கூட்டமைப்பிணை பாரிய பிளவொன்றினை நோக்கி நகர்த்தும் கூட்டமைப்பின் தலைவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுத்த கேவலமான குற்றச்சாட்டை வரலாறு புலம் பெயர் தமிழர்கள் மீதும்,புலத்திலிருக்கும் புத்திஜீவிகள் மீதும் சுமத்திவிடும்.
சமகாலத்தில் மீளவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள் ஒலிக்கத்தொடங்கி விட்டது. இம்முறை கொஞ்சம் பலமாக.பொதுவாக தேர்தல்களுக்கு முன்பாகவும் பின்பாகவும் இவ்வாறான கோசங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய அங்கத்துவ கட்சிகளால் எழுப்பப்படுவது வழமையாகிவிட்டது 2009 களின் பின்பாக. கிழக்கின் வேட்பாளர் தெரிவுகளில் அங்கத்துவ கட்சிகளுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் மிகுந்த சர்ச்சைகளை உள்ளரங்கில் உருவாக்கியிருந்தன. இந்தநிலை வடக்கு மாகானசபை தேர்தலிலும் உருவாகிவிடக்கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி தவிர்ந்த அங்கத்துவ கட்சிகள் மிகுந்த முனைப்புடன் செயற்படுவதையே உள்ளார்ந்து உணரமுடிகிறது. ஒரு இதயசுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தனித்துவ கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை மாற்றியமைக்க முயல்வது போல காட்டிக்கொண்டு தங்களின் அரசியல் இருப்பினை தக்க வைக்கவே அதிகம் முனைகிறார்கள் எனலாம். தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு .ஆனந்தசங்கரி அவர்களை முன்னிறுத்தி நகரும் இவர்களின் நகர்வானது தற்போதைய பாராளுமன்ற குழுத்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தெரியப்படாத தலைவருமாக இயங்கிக்கொண்டிருக்கும் சம்மந்தன் அவர்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து பணிய வைக்கும் ஒரு நகர்வாகவே இருக்கும்.
தமிழ் மக்களின் ஒரே தெரிவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்ததற்காகன ஒரே காரணம் தமிழ் மக்களின் அபிலாசைகளை, தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றிடம் உருவாகாமல் புலத்திலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரத்துடன் செயல்படுவதற்கான ஒரு கட்டமைப்பாக விடுதலைப்புலிகளின் அனுசரணைகளுடன் உருவாக்கப்பட்டதே ஆகும் . இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புள் அங்கத்துவம் பெற்றிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் வாழ்நாள் பாரளுமன்ற உறுப்பினர் என்று அழைக்கப்படும், கூட்டணியின் தலைவராகவும் இருந்த மு.சிவசிதம்பரம் அவர்கள், தன் இறுதிக்காலத்தில் தலைவருக்கு தான் தொண்டன் என்ற கருத்தியலை முன் வைத்து இருந்தார் என்பதும் நினைவில் கொள்ளவேண்டிய விடயமாகும். ஆயுத போராட்டமானது மௌனிக்கபட்ட பின்னான நிலையில் ஏற்பட வெற்றிடத்தினை,பேரம் பேசும் ஆற்றலினை விடுதலைப்புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு நிரப்பி தொடர்ந்தும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் என தமிழ் மக்கள் நம்பினார்கள்.ஆனால் இன்று தலைமைத்துவ வெற்றிடத்தில் தங்கள் இருப்பினை தக்கவைக்கும் பொறிமுறையில் நம்பிக்கை வைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் ஒரு தனி மனித எச்சாதிகாரங்களால் வழிநடத்தப்படுவதை உணர முடிகிறது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் மீளவும் தமிழ் மக்களின் இருப்பினை ஆதால பாதளத்தில் தள்ளிவிடுவதாகவே அமையும். இந்த இக்கட்டான நிலையினை தவிர்த்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் ஒருமித்த குரலாய் ஒலிக்கவும், உலகநாடுகளுக்கு எம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுதியம்புவதற்காகவும் தமிழ் தேசிய கூட்டமைபின் அங்கத்துவ கட்சிகளிடம் ஒரு உள்ளார்ந்த அர்ப்பணிப்பு அவசியமாகும். அரசியல் இருப்பினை கடந்து தாம் சார்ந்து நிற்கும் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி செயற்படும் ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு மாற்றம் பெறவேண்டும்.அதற்கான உடனடித்தேவையாக கூட்டமைப்பின் மதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டு கூட்டமைபினை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் மத்திய குழுவில் மூன்றாம் நிலைத்தலைவர்கள் அல்லது புத்திஜீவிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுடாகவே கூட்டமைபின் எந்தொரு நடவெடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும். இங்கே மூன்றாம் நிலைத்தலைவர்கள் அல்லது புத்திஜீவிகள் என்பது, முன்னாள் ஆயுதக்குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சாராத மக்களின் மீது, மக்களின் அபிலாசைகள் மீது கரிசனை கொண்ட வாக்கு அரசியலையோ,அதிகார மையங்களையோ நாடாத கல்வியாளர்களை,சமூக ஆர்வலர்களை குறிப்பதாகவே இருக்கிறது.
கிழக்கின் மாகாண சபை தேர்தல்களுக்கு முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சு வார்த்தைகள் நடாத்திய சிவில் சமூகத்தினரால் எழுப்பட்ட கேள்விகளுக்கு தீர்க்கமான பதில் எதுவும் வழங்காத கூட்டமைப்பின் பேசவல்ல உறுப்பினர்கள், தேர்தல் முடிந்து கூட்டமைப்பினை பதிவு செய்தல் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அறிந்ததும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் ஆணையை யாருக்கும் மக்கள் வழங்கி இருக்கவில்லை என கூறி தங்களில் இருப்பினை தக்க வைத்துக்கொள்ள கேள்விகளை கேட்பவர்கள் மீது ஒரு வித துரோகிகள் பட்டத்தை கொடுக்க முன் வந்தனர்.மக்களின் ஆணையை என்றுமே கருத்தில் கொள்ளாது, மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காது, ஒரு பகிரங்க சந்திப்புக்களையோ,அல்லது கலந்துரையாடல்களையோ நிகழ்த்த மறுக்கும் கூட்டமைப்பின் சில எச்சாதிகார உறுப்பினர்கள் இவ்வாறு அறிக்கைள் விடுவதன் மூலம் தங்களின் இருப்பின் தன்மையை உறுதி செய்யவே முயல்கிறார்கள் என்பது ஆணையை வழங்கிய மக்களுக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் கூட்டமைப்பினை மத்தியகுழு ஒன்றினை உருவாக்கி அதனூடாக பதிவு செய்வதன் மூலம் தமிழரசுக்கட்சி தன் தகமைவாய்ந்த இருப்பினை இழந்துவிடும் என்ற அச்சமே காரணமாகும். இன்றைவரைக்கும் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து செயற்பாடுகளுக்கும் உரிமைகோரக்கூடிய நிலையில் இருப்பது தமிழரசுக்கட்சி தான். ஒருவகையில் நோக்கினால் கூடமைப்பின் அங்கதுவக்கட்சிகளின் அச்சத்துக்கு காரணமாக இதுவே இருப்பதையும் உணரலாம். மக்கள்நலன் அக்கறை கொண்டதாக காட்டிக்கொளும் இவர்களின் பயமும் தங்களின் இருப்புகள் மீதே இருப்பதை காணலாம்.உண்மையில் யாதார்த்த ரீதியாக நோக்கினால் இன்றைய அரசியல் தலைமைகள் தங்களின் நலன் மீது அக்கறை கொண்டு நகர்கின்றனவே தவிர மக்களின் நலன் மீது அல்ல என்பது தெளிவாகிறது.இந்த நிலைகள் தொடரும் படசத்தில் தமிழர் அரசியல் அரங்கில் மீளவும் ஒரு பாரிய பெற்றிடம் ஒன்று உருவாகி, தமிர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கிவிடும் நிலை உருவாகும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலான தமிழர் போராட்டங்கள், தியாகங்கள் மறக்கடிக்கப்பட்டு, உயிர் சொத்து அழிவுகள் எல்லாம் பலனற்று போய்விடும். இந்த நிலை ஏற்படாதிருக்க வேண்டுமெனில், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களும், புலத்தில் தொடர்ந்தும் இயங்கு நிலையில் இருக்கும் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும் உடனடியான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் மத்திய குழு ஒன்றினை உருவாக்கி, அதனூடாக கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை கூட்டமைப்பின் இன்றைய தலைவர்களுக்கு உடனடியாக கொடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் கூட்டமைப்பிணை பாரிய பிளவொன்றினை நோக்கி நகர்த்தும் கூட்டமைப்பின் தலைவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுத்த கேவலமான குற்றச்சாட்டை வரலாறு புலம் பெயர் தமிழர்கள் மீதும்,புலத்திலிருக்கும் புத்திஜீவிகள் மீதும் சுமத்திவிடும்.
Wednesday, 9 May 2012
ஓங்கியொலிக்கட்டும் எங்கும்............
நாகரிக வாழ்வியலில் ஈடுபடத்தொடங்கிய மனித சமுதாயம் வர்க்க பாகுபாடு உடையதாக மாற்றமடைந்து ,சக மனிதனின் உரிமைகளை மறுத்து அவனை அடக்கி அடிமையாக்கி உழைப்பை சுரண்டும் ஒரு மிருகத்தனமான முதலாளித்துவ இயல்புக்குள் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்,அந்த முதலாளித்துவத்தை எதிர்த்து,சமுதாய வாழ்வியலில் சரிசமனாக வாழ்வியலை பெற எழுந்த போராட்டங்களே இந்த மேதினம் உருவாக அடிப்படைக்காரணம் .(இதுகுறித்து விரிவான விளக்கம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் )சுமார் ஒரு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய இந்த புரட்சி இன்று எந்த மாற்றத்தை மனிதசமுதாயத்தில் ஏற்படுத்தி இருக்கிறது ? குறிப்பாக ஈழத்தமிழர் வாழ்வியலில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது ?Friday, 27 April 2012
ஆசை என்னையும் விடவில்லையே.............
ஒருவாறு கிடைச்ச நேரத்தில நானும் ஒரு பதிவுப்பக்கத்தை தொடங்குவம் என்று வெளிக்கிட்டு இப்பதான் முடிச்சன் .....இனி எப்ப எப்ப நேரம்கிடைக்குதோ அப்பப்ப ஒரு பதிவை போட்டுத்தள்ளுவன் பாருங்கோ ......நீங்கள் எப்படியும் வாசித்து ஒரு குட்டோ இல்லை ,தட்டோ(அந்த தட்டு இல்லை பாருங்கோ இது வேற தட்டு ) வைச்சுட்டு போனியள் எண்டால் நானும் கொஞ்சம் சந்தோசமா இன்னும் நேரத்தை இதுக்கை விடுவன்.சரி சரி வாங்கோ ......
Subscribe to:
Posts (Atom)
.jpg)

.jpg)

.jpg)

.jpg)
.jpg)