இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளில் அழிவுற்றதும் அலைவுற்றதும் மட்டுமல்ல, இன ஒருமைப்பாட்டின் மையமாக காலகாலமாக திகழ்ந்து வந்திருந்ததும் இன்றைய கிழக்கு மாகாணமாக உருவாக்கப்பட்டிருக்கும் நிலத்தொடர்ச்சித்தான். இந்த நிலத்தில்தான் மூவின மக்களும் உணர்வறக் கலந்து வாழ்ந்து களித்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்வு இன்று வெறுமனே வரலாற்றுப் பதிவுகளாகவும் வாய்மொழி கதைகளாகவும் மட்டுமே எம் முன்னே நிலவிவருவது எம் காலத்திய வரலாற்றுத்துயரம். இதன் விளைவும் அனர்த்தமும் எம் ஒவ்வொருவரின் தோள்களையே சாரும்.
Showing posts with label வாசிப்பும் பகிர்வும். Show all posts
Showing posts with label வாசிப்பும் பகிர்வும். Show all posts
Friday, 27 April 2018
Sunday, 7 May 2017
சன்னங்களை மூடியிருக்கும் கைகளின் மீது ஓங்கி அறையுங்கள்
ஆயுதங்களுக்கு
கருத்தியல் முக்கியமானதல்ல. ஆயுதங்களுக்கு என் உயிர் பற்றிய அக்கறை கிடையாது அது
தட்டும் திசையில் மனிதன், நானாக
மட்டுமல்ல கடவுளே ஆனாலும் சாவு மட்டுமே தீர்ப்பு. எனினும் நான் பேனாவை நம்புகிறேன்.
“எஸ்போஸ்
(சந்திரபோஸ் சுதாகர், 1975 – 2007)
இந்தக் குறிப்புக்களைவிட வேறு எப்படி எஸ் போஸ் என்ற
இலக்கிய செயற்பாட்டாளனை அறிமுகம் செய்து விடமுடியும். ஒரு ஊடகவியலாளனாக, பத்திரிக்கை ஆசிரியராக, சஞ்சிகை நிறுவுனராக, எழுத்தாளானாக , கவிஞனாக, போராளியாக என்று
ஒரு சட்டகத்துக்குள் அடங்காத இளைஞராகவே இருந்த எஸ்போஸ் சிறுகதைகள் கட்டுரைகள் விமரிசனங்கள் நேர்காணல்கள் கவிதை என இலக்கிய செயற்பாட்டின் அனைத்து பக்கங்களிலும் தன் பேனாவினை பதித்துக்கொண்ட போதிலும் கவிதைகளோடு
அதிகம் நெருக்கமானவராவே இருந்திருக்கிறார்.
Thursday, 28 April 2016
பலி கேட்கும் சாமிக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறோம் ?
"உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல
தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாறவேண்டும் "--பெரியார்
தனித்தனிக் குழுமங்களாக அலைந்து
திரிந்த ஆதிமனிதன் ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம், நவீனம் என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும்
புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு
என்று உதிரிகளாகப்
பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல.
அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை.
அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்க்கொலையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, அது சாமி சடங்கு என்று அங்கீகாரம்
வழங்கிவிடமுடியாது, எனவே
நாங்கள் எந்தச் சாமியின்
பக்கமும் நிற்கமுடியாது.
Wednesday, 20 January 2016
இனி எப்படி திரும்பிப் பாராமல் போக முடியும்
மது போதையில்
மாரடைத்துப் போன
பரமேஸ்வரன் நாயருக்கு,
சவரம் செய்து
மூக்குச்சளி குண்டிப்பீ துடைத்து
குளிப்பாட்டி பவுடர் போட்டு
கை கால்
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டி
உடை மாற்றி
சென்ட் அடித்து
பிரேதத்தை கருநீள பெஞ்சில்
நீளமாக படுக்கவைத்துவிட்டு
கொஞ்சம் அருசியுடன்
வந்தார் அப்பா.
அன்னைக்கு ராத்திரி
வீட்டில
சோறு. பூரா
பொண நாத்தம்.
Friday, 4 September 2015
இருள் தின்ற ஈழம்.. -ஒரு பார்வை
நவீன கலை இலக்கிய வடிவங்களுள் கவிதைக்கு இருக்கும் பெறுமானமானது தனித்துவமானது. தான் சார்ந்திருக்கும் கருத்துருவாக்கத்தின் உச்சபட்ச வெளிப்பாட்டு தன்மையினை வெளிக்கொணரும் அதேவேளையில், இயங்குகின்ற தளத்திற்கு வாசகனை விரைவாகவும் நெருக்கமாகவும் அழைத்தும் செல்கிறது. மனதின் அக புற வயங்களில் அதீதமானதொரு ஊடுருவலை நிகழ்த்தி, நிகழ்கின்ற கணங்களை நிறுத்தி, தான் நிகழ்த்தும் கணத்துக்கு வாசிப்போனை கடத்திச்செல்லும் போதே கவிதையும் முழுமையடைகிறது.
அதேவேளையில், ஒரு படைப்பாளியின் இயங்கு தளமும், உணர்வுகளும் கவிதையின் உணர்வுகளையும் கவிதையின் வடிவங்களையும் தீர்மானித்தாலும், அந்த கவிதையூடாக பயணிக்கப்போகும் வாசகனின் தளமும், உணர்வும் அதே கவிதையில் வேறுபல பரிமாணங்களைக் கண்டெடுத்துக் கொள்கிறது. இது புதுக்கவிதைகள் கொண்டிருக்கும் விசேடமான ஒரு இயல்பு.
Saturday, 5 April 2014
நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் -ஒரு பார்வை
ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து, உணர்ச்சிகளால் ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில் ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட முடிகிறதோ அவரால் மட்டுமே வெற்றிபெற்ற ஒரு கவிதையை பிரசவிக்க முடியும்.
அந்தவகையில் "நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்" என்ற காரண கரியத் தொடர்புகளை தன்னிலை சார்ந்து வெளிக்கொண்டுவந்துள்ளார் பூங்குழலி வீரன். அவர் தன்னிலை சார்ந்து அவற்றை வெளிக்கொண்டு வந்த போதிலும் ஒவ்வொருவரையும் தன்வயப்படுத்தி ஒருமுறை தம் சொந்த நினைவுகளுள் மூழ்கிப் போக வைக்கிறது. கடந்துபோனவைகளை நினைத்து ஒரு பெருமூச்சினை வெளிவிடத்தூண்டுகிறது. கழிந்த மற்றும் வரப்போகும் நாட்களின் மறு பக்கத்தை எளிமையாக வெளிக்கொண்டுவந்து வாசிப்பவர்களை உணர்ச்சிகளின் திரளுக்குள் ஆழ்த்தி வைப்பதனூடாக தன்னை வெளிக்கொண்டுவரும் அவரை ஒரு காத்திரமான கவிஞராக அடையாளப்படுத்த முடியும்.
Subscribe to:
Posts (Atom)